கல்வி நிலையங்களில் தேசிய கொடி ஏற்றுவது எப்படி?...வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
பள்ளிகள், கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமிர்த மஹோத்ஸவ் என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்தது.
அந்த வகையில் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விடுதலைப் போருடன் தொடர்புடைய 75 ரயில் நிலையங்கள் மற்றும் 27 ரயில்களை நினைவுகூர்ந்து ஜூலை 18 தொடங்கி ஒரு வாரம் விழா நடத்தப்பட்டது.
இதையும் படிக்க: PM Modi On Independence Day : இதை செய்யலாம்.. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி சொன்ன ஐடியா
'ஆசாதி கா அம்ரித் மஹோத்ச' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) என்ற இயக்கத்தை பிரதமர் மோடி 'மன் கி பாத்' உரையின் வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி, வரும் ஆகஸ்ட் 2 முதல் 15 வரை சமூக ஊடக கணக்குகளில் மூவர்ண தேசியக் கொடியை தங்கள் ப்ரொபைல் பிக்சராக வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிஸ், சுதந்திர தினவிழா வருகின்ற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளிகள், கல்லூரிகளில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையுடன், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இணைத்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கப்பட வேண்டும்.
கொரோனா சூழ்நிலையை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ (விர்ச்சுவல் பார்மெட்) தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம். நேரடியாக நடக்கும் நிகழ்வில் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தேசிய போர் நினைவு சின்னம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அது தொடர்பாக தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவாக வெளியிடப்பட்டவை ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்