மேலும் அறிய

போடியில் இருந்து சென்னை வரை ரயில் சேவை...தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன்..!

சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இன்று இரவு 8:30 மணிக்கும், போடி - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இரவு 8:45 மணிக்கும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

தேனி போடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலான புதிய ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான அதிவேக சோதனை ஓட்டம் முன்னதாக மதுரை - போடி இடையே நடந்தது.

எந்த வழியில் செல்கிறது?

20602 என்ற வண்டி எண் கொண்ட இந்த ரயிலானது, செவ்வாய், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. இரவு 8:30 மணிக்கு போடியில் இருந்து கிளம்பும் இந்த ரயில் மறுநாள் காலை 7:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது. தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி வழியாக சென்னை செல்கிறது இந்த ரயில்.

சென்னையில் இருந்து போடி வரையில் மறு மார்க்கத்தில் (வண்டி எண் 20601) செல்லும் ரயில், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறபட்டு மறுநாள் காலை 9:35 மணிக்கு போடி செல்கிறது இந்த ரயில்.

எத்தனை பெட்டிகள் உள்ளன?

இந்த ரயிலில் இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி முன்பதிவு பெட்டிகள் 4, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 7, இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இயக்கத்திற்கான ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று மதுரை- போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் நடந்தது.

மதுரை -- போடி 91 கி.மீ., அகல ரயில் பாதையில் தண்டவாள அதிர்வுதிறன், ட்ராக் பாராமீட்டர் சோதனை உள்ளிட்டவை குறித்துஆய்வு செய்தனர். சோதனை ரயில், நேற்று காலை 10:00 மணிக்கு மதுரையில் புறப்பட்டு போடிக்கு காலை 11:05க்கு வந்தது.

மீண்டும் போடியிலிருந்து காலை 11:58க்கு புறப்பட்டு மதுரை சென்றது. இந்த ஆய்வில் மதுரை ரயில்வே கோட்ட மூத்த பொறியாளர் நாராயணன், உதவி கோட்ட பொறியாளர் வெள்ளைத்துரை, முதுநிலை பொறியாளர் விவேக், சப் சென்டர் உதவி பொறியாளர் அஞ்சனா ஆகியோர் 2 கூடுதல் பெட்டிகளுடன் இறுதி கட்ட சோதனையாக தண்டவாளங்களின் அதிர்வுத் திறன், மனித இடையூறுகள் குறித்து ஆய்வு
மேற்கொண்டனர். 

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை (ரயில் எண் : 20602) இன்று இரவு 8:30 மணிக்கும், போடி - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை (ரயில் எண்: 06702) இரவு 8:45 மணிக்கும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி எம்.பி.,ரவீந்திரநாத், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget