''நெஞ்சுக்கு நீதி பாருங்க''.. திமுக சாதனைக் கூட்ட மேடையில் படபடவென பேசிய அமைச்சர் பொன்முடி!
'அம்பேத்கர் பெரியார் கொள்கை எடுத்துரைக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்- அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் கானை தெற்கு, வடக்கு சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கெடார் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் ஏனென்று சொன்னால் உண்மையிலேயே அம்பேத்கர் தந்தை பெரியார் கொள்கைகளை பற்றியும், வரலாற்று இறுதியாக கடந்த காலம் எப்படி இருந்தது என்று இந்த நெஞ்சுக்கு நீதி படம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. திராவிட உணர்வோடு அம்பேத்கர் உணர்வோடு நெஞ்சுக்கு நீதி படம் இருப்பதாலேயே நானும் குடும்பத்துடன் சென்று பார்த்தோம். உதய் நடித்தார் என்பதற்காக நான் பார்க்கவில்லை.
கடந்த கால வாழ்க்கை வரலாறு பற்றி, நடைமுறை பற்றி இந்த படத்தில் அனைவரும் அப்பொழுது எப்படி இருந்தார்கள், ஜாதி ரீதியாக அப்பொழுது அனைவரையும் ஒதுக்கி வைக்கப்பட்டனர், அதன் வரலாற்றை அருமையாக நெஞ்சுக்கு நீதி படம் மூலம் காட்டியுள்ளனர். திமுக கழக ஆட்சியில் அனைவரும் சமம் என்ற முறையில் தற்பொழுது அனைவரும் ஒற்றுமையாக அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்து வருகின்றனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர்’’கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என சிலர் சொல்லித்திரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். திமுக மேல் கொண்டிருப்பது அதிருப்தி இல்லை திருப்தி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் 99% திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்திற்கு என்ன செய்தார்.
மேலும் கடந்த ஓராண்டு சாதனையில் தேர்தல் வாக்குறுதி கொடுத்த எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி கொடுத்த ஒரே முதல்வர் தான் மு க ஸ்டாலின். தேர்தல் வாக்குறுதி கொடுத்த திட்டங்களை இன்னும் நான்கு வருடத்தில் முடிப்பது அல்ல ஒரே ஒருத்தர் கூட முடித்ததற்கு வாய்ப்பு இருக்கிறது. மக்கள் மீது நம்பிக்கை கொண்ட நான் சொல்கின்றேன். நான்கு ஆண்டுகளுடன் முடிய போவதல்ல இந்த ஆட்சி. தளபதி இருக்கிறவரைக்கும் தமிழகத்தில் ஒரே முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மட்டுமே’’ என அமைச்சர் பொன்முடி பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்