மேலும் அறிய

10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி போதும்; வயது வரம்பில்லை- கல்வெட்டியல்,‌ தொல்லியல்‌ வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

2023 - 2024ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல்‌ மற்றும்‌ தொல்லியல்‌ பட்டய வகுப்புகளுக்கு ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்று உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌ தெரிவித்துள்ளது.

2023 - 2024ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல்‌ மற்றும்‌ தொல்லியல்‌ பட்டய வகுப்புகளுக்கு ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்று உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌ தெரிவித்துள்ளது. இதற்கு 10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி போதும், வயது வரம்பு எதுவும் இல்லை.

இதுகுறித்து உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’சென்னை, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ 2023-2024 ஆம்‌ ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல்‌ மற்றும்‌ தொல்லியல்‌, அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2023 ஜனவரி மாதம் முதல்‌ தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில்‌ கல்வெட்டியல்‌, தொல்லியல்‌ வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம்‌ குறித்து அறிந்துகொள்வதற்கும்‌, கல்வெட்டுப்‌ படியெடுத்தல்‌ மற்றும்‌ ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும்‌ அளிக்கப்படும்‌. இதில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும்‌ நாள் முழுவதும் நேரடியாக ஓராண்டுக்‌ காலம்‌ நடைபெறும்‌. இந்த பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இவ்வகுப்புக்கான குறைந்தபட்சக்‌ கல்வித்‌ தகுதி பத்தாம்‌ வகுப்புத்‌ தேர்ச்சி. அதேபோல வயது வரம்பு எதுவும் கிடையாது. சேர்க்கைக்‌ கட்டணம்‌ ரூ.3000/- ஆகும்‌.

சேர்க்கைக்‌ கட்டணம்‌ "இயக்குநர்‌, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌" (DIRECTOR, International Institute of Tamil Studies) என்ற பெயரில்‌ வங்கி வரைவோலையாகவோ அல்லது நிறுவன வங்கிக்‌ கணக்கில்‌ இணையம்‌ வழியாகவோ செலுத்தி, செலுத்தப்பட்டமைக்கான ரசீதினை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்‌ இணைத்து அனுப்பப்பட வேண்டும்‌.

Teachers Appointment: இவர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களே அல்ல - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 2022 டிசம்பர்‌ 31ஆம்‌ தேதி மாலை 5.00 மணிக்குள்‌ நிறுவன முகவரிக்கு (இயக்குநர்‌, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌, இரண்டாம்‌ முதன்மைச்‌ சாலை, மையத்‌ தொழில்நுட்பப்‌ பயிலக வளாகம்‌, தரமணி, சென்னை - 600 113) வந்து சேர வேண்டும்‌. வகுப்புகள்‌ தொடங்கப்பெறும்‌ நாள்‌, நேரம்‌ போன்ற விவரங்கள்‌, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவன வலைதளத்தில்‌ பின்னர்‌ வெளியிடப்படும்‌.

மேலும்‌ தகவல்களுக்கு, வேலை நாட்களில்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌''.

இவ்வாறு உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌ தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.ulakaththamizh.in/ என்ற இணைய முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 

Pragati scholarship: இலவசப் பெண் கல்வி..ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- எப்படி? 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Embed widget