மேலும் அறிய

Pragati scholarship: இலவசப் பெண் கல்வி..ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- எப்படி?

இலவசப் பெண் கல்வியை அளிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கும் பிரகதி ரூ.50 ஆயிரம் உதவித்தொகைக்கு மாணவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இலவசப் பெண் கல்வியை அளிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கும் பிரகதி ரூ.50 ஆயிரம் உதவித்தொகைக்கு மாணவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

உயர் கல்வி நிறுவனமான ஏஐசிடிஇ சார்பில் பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பிரகதி என்ற திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2022- 23ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசித் தேதியாக இருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. 

இந்த கல்வி உதவித்தொகைக்கு பொறியியல் முதல் ஆண்டு மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகையைப் பெற 10, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். திருமணத்துக்குப் பிறகு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

பிரகதி உதவித்தொகைக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமல்லாமல், ஏற்கெனவே இந்தத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்து, விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 4 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

உதவித் தொகையை வழங்குவதில் எஸ்சி மாணவிகளுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடும், எஸ்டி மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், ஓபிசி மாணவிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படும்.

Pragati scholarship: இலவசப் பெண் கல்வி..ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- எப்படி?

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

* பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
* மாணவியின் ஆதார் எண்
* வருமானச் சான்றிதழ்
* கல்விக் கட்டண நகல்
* சாதிச் சான்றிதழ்
* கல்லூரி தலைவரிடம் இருந்து சான்றிதழ்

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 டிசம்பர் 2022

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்த மேலும்கூடுதல் விவரங்களை https://www.aicte-pragati-saksham-gov.in/resources/combine%20pragati%20&%20saksham%20(1).pdfஎன்ற தளத்தில் அறியலாம்.

பிரகதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க: https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

முன்னதாக, பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக "பரிக்‌ஷா பே சார்ச்சா" என்ற நிகழ்ச்சிக்குப் பதிவு செய்யவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Embed widget