மேலும் அறிய
Advertisement
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது : இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள்
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது உள்பட பல்வேறு முக்கிய தலைப்புச் செய்திகளை கீழே காணலாம்.
தலைப்புச் செய்திகள்
- தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
- வாக்குப்பதிவிற்காக மாநிலம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- 2021 சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 6.28 கோடி வாக்காளர்கள் தகுதியுள்ள நபர்களாக உள்ளதாக சத்யப்பிரதாப் சாஹூ கூறியுள்ளார்.
- தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் 4.17 லட்சம் நபர்கள் ஈடுபட உள்ளனர்.
- தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
- 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 10 ஆயிரத்து 528 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
- தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் நபர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மாநிலம் முழுவதும் இதுவரை 1.31 லட்சம் தபால் வாக்குகள் இதுவரை பெறப்பட்டுள்ளது.
- தேர்தல் பறக்கும் படையினரால் மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.428 கோடியே 46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- தமிழகம் மட்டுமின்றி புதுவை, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்
- கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடரபாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் நாளை மறுநாள் பிரதமர் மோடி ஆலோசனை
- மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பலியாகிய 22 பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு அமித்ஷா நேரில் அஞ்சலி
- நாட்டில் நக்சலுக்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்படும். முடிவில் அரசே வெற்றி பெறும் – அமித்ஷா
- அசாமில் மூன்றாம் மற்றும் இறுதி கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு.
- கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் நடைபெற இருந்த பேட்மிண்டன் போட்டிகள் ரத்து.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion