கரூர் போக்குவரத்து பணிமனை நிர்வாகிகள் தேர்தல்; விதி மீறிய நபர்கள் விரட்டியடிப்பு
வேட்பாளர்கள் கூச்சலிட ஆரம்பித்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாக்கு செலுத்த செல்லும் உறுப்பினர்களை தவிர மற்ற நபர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியே விரட்டி அடித்தனர்.
கரூர் போக்குவரத்து பணிமனை நிர்வாகிகள் தேர்தலின்போது விதிமீறி வளாகத்திற்குள் சென்ற நபர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலத்துக்குட்பட்ட இரண்டு கிளைகளுக்கான திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பணிமனை நிர்வாகிகள் தேர்தல் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.
இதில் கிளை 1-ல் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளுக்கு தலா மூன்று வேட்பாளர்கள், மூன்று அணிகளில் இருந்து போட்டியிடுகின்றனர். இதேபோல் கிளை 2-ல் தலைவர், செயலாளர், பொருளாளர், பதவிகளுக்கு தலா இரண்டு வேட்பாளர்கள், இரண்டு அணிகளில் இருந்து போட்டியிடுகின்றனர். பணிமனை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரும், திருமாநிலையூர் டிப்போ வளாகத்திற்குள் வாக்கு செலுத்த செல்லும் உறுப்பினர்களைத் தவிர வேறு நபர்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் டீசல் நிரப்ப உள்ளே செல்லும் பேருந்துகளில், ஒரு சிலர் அனுமதி இன்றி விதி மீறி உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட வேட்பாளர்கள் கூச்சலிட ஆரம்பித்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாக்கு செலுத்த செல்லும் உறுப்பினர்களை தவிர மற்ற நபர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெளியே விரட்டி அடித்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பணிமனை நிர்வாகிகள் தேர்தலை படம் பிடிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று கிளை மேலாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்