மேலும் அறிய

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபின் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளதை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக சார்பாக சுமார் 505 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதில் முக்கியமான அறிவிப்புகளை கூட செய்வோம் என அவர்கள் உறுதி தரவில்லை.

மக்களிடம் பொய்யான வாக்குறுதியை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது; திமுக சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்; ஸ்டாலின் முதல்வராக தேர்வான உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்கள், ஆனால் தேர்தல் முடிந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

நீட் தொடர்பாக கண் துடைப்புக்கு ஒரு கமிஷனை அமைத்து நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்; ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்யும் கையெழுத்து என்றார்கள்

கல்விக்கடன் ரத்து குறித்தும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிப்பதாகவும் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்றார்கள் ஆனால் அதையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை

5 சவரனுக்கு குறைவாக வங்கியில் அடகுவைத்த நகைக்கடன் குறைக்கப்படும் என்றும், மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறிய நிலையில் அதையும் செய்யவில்லை

அதிமுக அரசு இருந்தவரை மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், மின்மிகை மாநிலமாகவும் இருந்தது; இன்றைக்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, அதனை சரி செய்ய வேண்டும்

இப்படி பல வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது சூழலிலே, மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்வழக்குகளை போட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் தற்போது கொந்தளிப்பாக இருக்கும் இந்த நிலையில் திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவது, பொய் வழக்குகளை போடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்

அதிமுக என்றும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும், மக்கள் பிரச்னைகளை தீர்க்கும்

திமுக ஆட்சியில் இருந்து இறங்கும்போது ஒரு லட்சம் கோடி கடனை வைத்துவிட்டுதான் சென்றார்கள்; கடன் வாங்குவது என்றால், அரசாங்கத்தின் திட்டங்களுக்காகவும், வளர்ச்சி பணிகளுக்காகவுமே வாங்கியுள்ளோம்; முதலீடு செய்வதற்காகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கினோம்

லாட்டரி சீட்டு விவகாரத்தில் தேவையில்லாத குற்றச்சாட்டை நீங்கள் வைத்துள்ளதாக திமுக விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு ’எங்களுக்கு கிடத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவுள்ளதாக அறிக்கைவிட்டுள்ளேன்; இல்லை என்றால் அது நன்றி, ஆனால் தமிழகத்தில் லாட்டரி சீட்டு வந்துவிடக்கூடாது’

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஸ்டாலினிடம் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என கேள்வி எழுப்பினேன், அப்போது அதற்கு மழுப்பலான பதிலை சொன்னார்கள்; ஆனால் இப்போது மாணவர்களை நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என சொன்னார்கள்.

எங்களுடைய ஆட்சியில்தான் கொரோனா தொற்று இருந்தது, கொரோனா தொற்றை கடுப்படுத்துவதில் சிறந்த அரசாக அதிமுக அரசுதான் இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார்

திமுக தேர்தல் அறிக்கையில் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என திமுக தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளதே என்ற கேள்விக்கு, இப்போது ஊழல் அமைச்சரைத்தானே ஸ்டாலின் வைத்துள்ளார், அவரை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே என பதிலளித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Thirumavalavan: அம்பேத்கரைவிட்டு திமுகவுக்கு டிக் அடித்த திருமா.! ஷாக்கான ஆதவ்.!
Thirumavalavan: அம்பேத்கரைவிட்டு திமுகவுக்கு டிக் அடித்த திருமா.! ஷாக்கான ஆதவ்.!
Rasipalan December 04: மிதுனத்திற்கு கணவன்- மனைவி பிரச்சினையா? மத்த ராசிக்கு இந்த நாள் எப்படி?
Rasipalan December 04: மிதுனத்திற்கு கணவன்- மனைவி பிரச்சினையா? மத்த ராசிக்கு இந்த நாள் எப்படி?
Nethran Death: விஜய் டிவி 'பொன்னி' சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Nethran Death: விஜய் டிவி 'பொன்னி' சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Thirumavalavan: அம்பேத்கரைவிட்டு திமுகவுக்கு டிக் அடித்த திருமா.! ஷாக்கான ஆதவ்.!
Thirumavalavan: அம்பேத்கரைவிட்டு திமுகவுக்கு டிக் அடித்த திருமா.! ஷாக்கான ஆதவ்.!
Rasipalan December 04: மிதுனத்திற்கு கணவன்- மனைவி பிரச்சினையா? மத்த ராசிக்கு இந்த நாள் எப்படி?
Rasipalan December 04: மிதுனத்திற்கு கணவன்- மனைவி பிரச்சினையா? மத்த ராசிக்கு இந்த நாள் எப்படி?
Nethran Death: விஜய் டிவி 'பொன்னி' சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
Nethran Death: விஜய் டிவி 'பொன்னி' சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Embed widget