Chennai Earthquake: சென்னையில் நில அதிர்வு: நுங்கம்பாக்கம், பூந்தமல்லி பகுதியில் உணரப்பட்டது!
வங்கக் கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக, சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சென்னை பகுதியில் அந்த நில அதிர்வு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது எந்த இடம், எந்த அளவிற்கு நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் விரிவாக தெரிவிக்கப்பட உள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், இதனுடைய தாக்கம் அடுத்தடுத்து இருக்குமா அல்லது வேறு ஏதேனும் சிரமத்தை சென்னை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை மத்திய சென்னை பகுதிகளான நுங்கம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் தான் நில அதிர்வு உணரப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன.
Earthquake of Magnitude:5.1, Occurred on 24-08-2021, 12:35:50 IST, Lat: 14.40 & Long: 82.91, Depth: 10 Km ,Location: 296km SSE of kakinada, Andhra Pradesh, India for more information download the BhooKamp App https://t.co/6qwi4D40KO @ndmaindia @Indiametdept pic.twitter.com/dLB55CDm36
— National Center for Seismology (@NCS_Earthquake) August 24, 2021