மேலும் அறிய

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...! முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துவதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி வரும் சோதனையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...! முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் வந்து லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடங்கினர். அதேபோல, மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அ.தி.மு.க. நகர செயலாளரும், ஆர்.காமராஜின் உறவினரான ஆர்.ஜி.குமார், வேட்டை திடலில் உள்ள காமராஜின்  நண்பர் சத்தியமூர்த்தி வீடு, தஞ்சாவூரில் உள்ள ஆர்.காமராஜ் சம்மந்தியின் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, சென்னையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் துறை அமைச்சராக காமராஜ் இருந்தபோது தனது அரசு பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து ஆசையும் மற்றும் அசையா சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினர்கள் பேரிலும் நண்பர்கள் பெயரிலும் ரூபாய் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது. 

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...! முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

இந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்சஒழிப்புத்துறை முன்னாள் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்களான இனியன், இன்பன் மற்றும் காமராஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது அரசு பதவியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானவர் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு கூடி வருகின்றனர். கூடியிருக்கும் கட்சியினர் திமுக அரசை
கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
Embed widget