மேலும் அறிய

Mettur Dam: அதிரடியாக உயரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 3,355 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,282 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,537 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 3,355 கன அடியாக அதிகரித்துள்ளது.

Mettur Dam: அதிரடியாக உயரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 3,355 கன அடியாக அதிகரிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 98.93 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 63.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 15,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: அதிரடியாக உயரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 3,355 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Breaking News LIVE: சென்னையில் காலை 10 மணி வரை மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: சென்னையில் காலை 10 மணி வரை மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய கட்டிய சவுக்கு சங்கர் !
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய கட்டிய சவுக்கு சங்கர் !
Rasi Palan Today, Sept 26: கடகத்துக்கு பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும்; மிதுனத்துக்கு லாபம்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: கடகத்துக்கு பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும்.மிதுனத்துக்கு லாபம்: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Breaking News LIVE: சென்னையில் காலை 10 மணி வரை மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: சென்னையில் காலை 10 மணி வரை மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய கட்டிய சவுக்கு சங்கர் !
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய கட்டிய சவுக்கு சங்கர் !
Rasi Palan Today, Sept 26: கடகத்துக்கு பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும்; மிதுனத்துக்கு லாபம்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: கடகத்துக்கு பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும்.மிதுனத்துக்கு லாபம்: உங்கள் ராசிக்கான பலன்
தமிழகத்தில் இன்று ( 26.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்! எங்கெல்லாம்?
தமிழகத்தில் இன்று ( 26.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்! எங்கெல்லாம்?
ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை - சொதப்பிய விராட் கோலி, ரோஹித் ஷர்மா! பட்டியலில் எத்தனையாவது இடம்?
ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை - சொதப்பிய விராட் கோலி, ரோஹித் ஷர்மா! பட்டியலில் எத்தனையாவது இடம்?
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Shreyas Iyer:மும்பையில் அடுக்கு மாடி வீடு - ஸ்ரேயாஸ் ஐயரின் புதிய வீட்டின் விலை இத்தனை கோடியா?
Shreyas Iyer:மும்பையில் அடுக்கு மாடி வீடு - ஸ்ரேயாஸ் ஐயரின் புதிய வீட்டின் விலை இத்தனை கோடியா?
Embed widget