மேலும் அறிய

Mettur Dam: அதிரடி சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 14,273 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 30,475 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 20,255 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 14,273 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: அதிரடி சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 14,273 கன அடியாக குறைந்தது.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 108.22 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 75.90 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: அதிரடி சரிவு... மேட்டூர் அணையின் நீர்வரத்து 14,273 கன அடியாக குறைந்தது.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Census of India: வெயிட்டிங் ஓவர் - அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2028-க்குள் தொகுதி மறுவரையறை?
Census of India: வெயிட்டிங் ஓவர் - அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2028-க்குள் தொகுதி மறுவரையறை?
Gold Price Hike : அடித்து தூக்கிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்.. ரூ.59,000 ஆனது சவரன் மதிப்பு..
அடித்து தூக்கிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்.. ரூ.59,000 ஆனது சவரன் மதிப்பு..
New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை
New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை
Kasaragod: கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - 154 பக்தர்கள் காயம், 10 பேர் கவலைக்கிடம் - கேரளாவில் அதிர்ச்சி
Kasaragod: கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - 154 பக்தர்கள் காயம், 10 பேர் கவலைக்கிடம் - கேரளாவில் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Teacher Slaps Student : மாணவியை தாக்கிய TEACHER நடுரோட்டில் நடந்த கொடூரம் அதிரடி காட்டிய போலீஸ்TVK Maanadu Issue உடைந்து கிடக்கும் நாற்காலிகள்குப்பைக் கூளமான மாநாடு திடல் விளாசும் உள்ளூர் மக்கள்Anjalai Ammal Profile : தென்னிந்தியாவின் ஜான்சிராணி தவெக போற்றும் சிங்கப்பெண் அஞ்சலை அம்மாள்?TVK Maanadu Vijay Speech | பெயர் சொல்ல பயந்தாரா விஜய்? ஒளிஞ்சு விளையாடியது ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Census of India: வெயிட்டிங் ஓவர் - அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2028-க்குள் தொகுதி மறுவரையறை?
Census of India: வெயிட்டிங் ஓவர் - அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2028-க்குள் தொகுதி மறுவரையறை?
Gold Price Hike : அடித்து தூக்கிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்.. ரூ.59,000 ஆனது சவரன் மதிப்பு..
அடித்து தூக்கிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்.. ரூ.59,000 ஆனது சவரன் மதிப்பு..
New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை
New Rule From 1st Nov: நவ.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் - கிரெடிட் கார்ட் தொடங்கி ஐஆர்சிடிசி விதி வரை
Kasaragod: கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - 154 பக்தர்கள் காயம், 10 பேர் கவலைக்கிடம் - கேரளாவில் அதிர்ச்சி
Kasaragod: கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - 154 பக்தர்கள் காயம், 10 பேர் கவலைக்கிடம் - கேரளாவில் அதிர்ச்சி
Diwali 2024: தீபாவளிக்கு திருப்பதி போறீங்களா? பக்தர்களுக்காக தேவஸ்தானம் செய்த ஏற்பாடுகள் இத்தனையா?
Diwali 2024: தீபாவளிக்கு திருப்பதி போறீங்களா? பக்தர்களுக்காக தேவஸ்தானம் செய்த ஏற்பாடுகள் இத்தனையா?
November 2024 bank holidays: ரவுண்டா 13 நாட்கள் வங்கிகள் விடுமுறை - தமிழ்நாடு உட்பட மாநில வாரியான நவம்பர் மாத லிஸ்ட் இதோ
November 2024 bank holidays: ரவுண்டா 13 நாட்கள் வங்கிகள் விடுமுறை - தமிழ்நாடு உட்பட மாநில வாரியான நவம்பர் மாத லிஸ்ட் இதோ
Tumakuru: பாறை இடுக்கில் 12 மணி நேரம் பரிதவித்த கல்லூரி மாணவி - நடந்தது என்ன?
Tumakuru: பாறை இடுக்கில் 12 மணி நேரம் பரிதவித்த கல்லூரி மாணவி - நடந்தது என்ன?
ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா? தவெக தலைவர் விஜய் மீது எம்பி திருமாவளவன் விமர்சனம்!
ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா? தவெக தலைவர் விஜய் மீது எம்பி திருமாவளவன் விமர்சனம்!
Embed widget