‛கொரோனா தடுப்பூசியும், மாரடைப்பு மரணங்களும் ’ மருத்துவர் மஞ்சுநாதன் தரும் விளக்கம் 

நடிகர் விவேக் மரணம் காரணமாக கொரோனா தடுப்பூசி மீது சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ‛கொரோனா தடுப்பூசியும், மாரடைப்பு மரணமும்’ என்கிற தலைப்பில் பிரபல மருத்துவர் மஞ்சுநாதன் சமூகவலைதள விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். மருத்துவராக அவரது பார்வையில் தடுப்பூசி குறித்த விளக்கங்கள் இதோ:

"கொரோனா தடுப்பூசியும்,மாரடைப்பு மரணங்களும் "‛கொரோனா தடுப்பூசியும், மாரடைப்பு மரணங்களும் ’  மருத்துவர் மஞ்சுநாதன் தரும் விளக்கம் 


ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அமைப்போட பிரதிநிதி இன்னைக்கு காலைல பேசும்போது மாமனிதன் நடிகர் விவேக்'வோட இறப்புக்கு நேத்து அவர் போட்ட கொரோனா தடுப்பூசி தான் காரணம்.. ஏன் மக்களை கொரோனா ஊசி போட்டு கொல்ரீங்க. உங்களுக்குலாம் இரக்கமே இல்லையானு பேட்டி குடுத்து இருந்தார்..?? 


தடுப்பூசி பத்தின பயம் மக்கள் கிட்ட போயி அதோட நம்பகத்தன்மையை அறிஞ்சி மக்களா முன்வந்து தடுப்பூசி போட்டுகிற இந்த நேரத்துல இந்த மாரடைப்பு இறப்பு வருதுனு சொல்றாங்களே .இது எந்த அளவுக்கு உண்மை ?.


"Platlets அப்டிங்கற ரத்த அணுக்கள் உடம்புல நெறய இருக்கு ..அந்த அணுக்கள் ஓட வேலை என்னன்னா உடம்புல எங்கவாது காயம் ஏற்படும்போது அந்த எடத்துல போய் படிஞ்சி அங்க தேவை இல்லாம ஏற்படுற ரத்த இழப்புகளை தடுக்கறது தான் அதோட பிரதான வேலை.. உடம்புக்கு வெளியவும் சரி,உடம்புக்கு உள்ளவும் சரி..‛கொரோனா தடுப்பூசியும், மாரடைப்பு மரணங்களும் ’  மருத்துவர் மஞ்சுநாதன் தரும் விளக்கம் 


-இப்போ உடம்புக்கு உள்ள ஏற்படுற ரத்த உறைதல ரெண்டு வகையா பிரிக்கலாம்.. artery எனப்படுகிற தமனில ஏற்படுகிற ரத்த உறைதல் .vein எனப்படுகிற சிரைல ஏற்படுகிற ரத்த உறைதல்.. உடம்புல இருக்குற எல்லா உறுப்புக்குகளுக்கும் இந்த தமனி சுத்த ரத்தத்தை கொண்டு போகும்.. சிரை அசுத்த ரத்தத்தை உறுப்புகள்ல இருந்து இதயத்துக்கு கொண்டு போய் ,நுரையீரல்ல சுத்திகரிச்சி நல்ல ரத்தமா மாத்தி அங்க இருந்து இருதயத்துக்கு வந்து சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் தமனி மூலமா திரும்ப உடம்புல இருக்குற எல்லா பகுதிக்கும் போகுது..


-தமனில ஏதாவது அடைப்பு ஏற்படும்போது, அதாவது  இதயத்துக்கு போகுற தமனில அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பாவும்,மூளைக்கு போகுற தமனில அடைப்பு ஏற்படும்போது பக்க வாதமும் உருவாகுது..இதுல தமனி சுத்திகரிக்கபட்ட இரத்ததை கொண்டு போறதால அதுல அழுத்தம் எப்போவும் அதிகமா இருக்கும்..அதுனால அவ்ளோ சீக்கிரம் platlet 'ஆல தமனில ரத்தத்தை உறைய வைக்க முடியாது.. ஆனா vein எனப்படுகிற சிரை'ல அசுத்தமான ரத்தத்தை கொண்டு போறதாலயும், அழுத்தம் குறைவா இருக்குறதாலயும் platlet ஆள அவ்ளோ சுலபமா அங்க ரத்த உறைதல ஏற்படுத்த முடியும்..


-இப்போ கொரோனா தடுப்பூசி போட்டா என்ன ஆகுதுன்னா, போடுற தடுப்பூசி பத்து லட்சத்துல ஒருத்தருக்கு இந்த platlet ah stimulate பண்ணி ரத்தம் உறைதல ஏற்படுத்தும்னு ஒரு ஆய்வறிக்கை சொல்லுது.. அந்த ஒரு மனிதருக்கு vein எனப்படுகிற சிரை'ல ரத்தம் உறைதல அதிகமாவும் ,உறுப்புகளுக்கு சுத்தமான ரத்தத்தை கொண்டு போற தமனில குறைந்த அளவு ரத்த உறைதல உருவாக்கும்னு..சிரைல உரையுற ரத்தம் பெருசா எந்த ஒரு பாதிப்பையும் உருவாக்காது .‛கொரோனா தடுப்பூசியும், மாரடைப்பு மரணங்களும் ’  மருத்துவர் மஞ்சுநாதன் தரும் விளக்கம் 


-கொரோனா தடுப்பூசி தமனில ரத்தம் உறைதல ஏற்படுத்து நாளும் அது மாரடைப்பை ஏற்படுத்துற அளவுக்கு ரத்தம் உறைதல ஏற்படுத்துனும்னா இரண்டுல இருந்து மூணு வாரங்கள் ஆகும்.. இங்கிலாந்துல இந்த மாதிரி ரெண்டு கோடி பேருக்கு போட்ட தடுப்பூசில 78 பேருக்கு மட்டுமே ரத்த உறைதல் ஏற்பட்டதாகவும் அதுல 3 பேர் மட்டுமே இறந்ததாகவும் ஒரு ஆய்வறிக்கை சொல்லுது...இறப்பு விகிதம் ரெண்டு கோடி பேருல வெறும் 3 பேர் தான் ..


"இந்த மாதிரி இருக்கும்போது தடுப்பூசி போட்ட அடுத்த நாளே மாரடைப்பால இறக்கிறதுலாம் நடைமுறைல சாத்தியமே இல்லாத ஒன்னு" ..


-கோவிட் தடுப்பூசிகள் 90-95% அரசு மருத்துவர்கள் எடுத்துகொண்டுவிட்டனர். தனியாரிலும் அதே அளவு இருக்கும். சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் என்று கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தடுப்பூசிகளை ஏற்கனவே எடுத்து கொண்டு பாதுகாப்பாக உள்ளனர். நடிகர் விவேக் மரணம் எனும் ஒரு Stray Incident ஐ வைத்து கான்ஸ்பிரசி தியரிகள் முடிவது மொத்த மருத்துவ அறிவியலையும் கேலிகூத்தாக்கும்..


-தடுப்பூசி 100 % பாதுகாப்பான ஒன்னு இங்க யாரும் சொல்ல வரல.. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பா இருந்தாலும் அதுல கொஞ்சம் குறைகள் இருக்க தான் செய்யும் ..அறிவியல் சமூகம் இருக்குற குறைகளை கண்டுபிடிச்சி அதை நிவர்த்தி பண்ணிட்டு போறதுல எப்போவும் கவனமா இருக்கும் ..


- "benefits outweights risks "concept படி கொரோனா தடுப்பூசினால நமக்கு ஏற்படுற நன்மையை compare பண்ண அதுனால ஏற்படுற தீமைகள் ரொம்ப ரொம்ப குறைவு ..உயிர் இழப்புகள் முதல் அலையை compare பண்ணும்போது ரெண்டாவது waveல அதிகமா இருக்குறத தினமும் கண்கூடா பாத்துட்டு தான் இருக்கோம்..


 -குஜராத் போன்ற மாநிலங்கள்ல கொரோனா நோயாளிகளை அனுமதிக்கறதுக்கு படுக்கை வசதி இல்லாம ஒரே படுக்கைல ரெண்டு பேர அட்மிஷன் போடுற ஒரு பரிதாப நிலையையும் பாத்துட்டு தான் இருக்கோம்,வட மாநிலங்கள்ல இறந்த கொரோனா நோயாளிங்கள எரிக்கறதுக்கு மயானங்கள் இல்லாம ரோடுல போட்டு இறந்த மதிப்பிற்குரியவங்கள எரிக்கிற அவலத்தையும் பாத்துட்டு தான் இருக்கோம்..


அந்த ஒரு கோடி பேருள மூணு இறப்பு கூட வராத அளவுக்கு தடுப்பூசியும், அறிவியலும் வளர்ந்த அப்புறம் தான் நா தடுப்பூசி போட்டுபேன்னு இருந்தோம்னா இந்தியா மாதிரி மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டுல நம்ம அதுக்கு மிக பெரிய ஒரு விலையை குடுக்க வேண்டியதா இருக்கும்.. 


"பொய்யான சில வதந்திகளை நம்பாம மேற்கண்ட மோசமான நிலைமைக்கு நம்ம போகாம இருக்கணும்னா தடுப்பூசி ரொம்பவே அவசியம்.."


- மரு. மஞ்சுநாதன் 

Tags: Vivek covid medicine abp abp nadu abp live actor Vivek covid doctor

தொடர்புடைய செய்திகள்

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Covid-19 Vaccine Global Tender: தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிவழங்க முன்வராத தனியார் நிறுவனங்கள்

Covid-19 Vaccine Global Tender: தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிவழங்க முன்வராத தனியார் நிறுவனங்கள்

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழக அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழக அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு

திருவண்ணாமலை | நாடக கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நடிகர் பூச்சி முருகன், தாடி பாலாஜி

திருவண்ணாமலை | நாடக கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நடிகர் பூச்சி முருகன், தாடி பாலாஜி

2000 வழங்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்- ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

2000 வழங்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்- ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

டாப் நியூஸ்

மயிலாடுதுறை : கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி ஆசிரியர் கைது

மயிலாடுதுறை : கல்லூரி மாணவி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி ஆசிரியர் கைது

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

Ajinkya Rahane Birthday | இந்திய அணியின் `ஆபத்பாண்டவன்' அஜிங்கிய ரஹானே...!

Ajinkya Rahane Birthday | இந்திய அணியின் `ஆபத்பாண்டவன்' அஜிங்கிய ரஹானே...!

'எனது வாழ்க்கையை புரட்டிப்போட்ட திரைப்படம்' : மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

'எனது வாழ்க்கையை புரட்டிப்போட்ட திரைப்படம்' : மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் !