பணியிட மாறுதல், பணி நியமனங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - பால்வளத்துறை அமைச்சர்
ஆவின் பால்வளத்துறையில் பணியிட மாறுதல் மற்றும் பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பால்வளத்து அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.
![பணியிட மாறுதல், பணி நியமனங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - பால்வளத்துறை அமைச்சர் do not pay brokers and get cheated for appointments & transfer S.M.Nasar Minister for Milk& Dairy development பணியிட மாறுதல், பணி நியமனங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் - பால்வளத்துறை அமைச்சர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/04/998c8ee409214dab6b3f17c216cca198_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஆவின். ஆவின் விதிமுறைப்படி, எழுத்துத் தேர்வு முடிந்து 15 நாட்கள் கழித்துதான் நேர்முகத்தேர்வு நடைபெற வேண்டும். அடுத்த 10 நாட்கள் கழித்துதான் நியமனம் செய்யவேண்டும். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அவசர அவசரமாக ஆவின் நிறுவனத்தில் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியது. கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜுன் 15ஆம் தேதி வரை நடைபெற்ற பணி நியமனங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் விசாரணையை முடுக்கிவிட்டது. குறிப்பாக தேனி, மதுரை, விருதுநகர், நாமக்கல், தஞ்சை உள்பட 8 மாவட்டங்களில் விதிகளை பின்பற்றாமலும் முறைகேடாகவும் மேலாளர் உள்பட 870 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருந்தது. முறைகேடுகளில் பல்வேறு உயரதிகாரிகளும் ஈடுபட்டதெரியவந்தது. இது தொடர்பாக தற்போது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அப்போது செய்யபப்ட்ட பணி நியமனங்கள் அனைத்தையும் நிறுத்திவைத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, பால்வளத்துறையில் பணியிட மாறுதல், பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் பொது மக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததனால்ஆவின் பால் விற்பனை வெகு வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் 1 கோடி நுகர்வோர்கள் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். புதிதாக ஏறக்குறைய 6 லட்சம் நுகர்வோர்கள் ஆவினில் இணைந்தமையால் ஆவினின் சந்தை அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவின்பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி சங்கங்களைப் புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் (ஆவின்) மற்றும் பால்வளத்துறையில் செயல்பாடுகளை துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுக்க நிர்வாக காரணங்களுக்காக பணியிட ஆணை வெளியிடப்படுகிறது.
எனவே ஆவின் பால்வளத்துறையில் பணியிட மாறுதல் மற்றும் பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிக்க
திருவாரூர்: வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து விளக்கிய திமுக எம்.எல்.ஏ
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)