மேலும் அறிய

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை...! - தி.மு.க. எம்.பி ஆர்.எஸ்.பாரதி..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என்று தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.

திமுகவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் தற்போதைய இணை அமைச்சருமான எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு சென்னை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைத் தொடுத்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர்,  நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, 

"தற்போதைய பாஜகவின் மத்திய அமைச்சர் எல்.முருகன்  நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல், வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முரசொலி அறக்கட்டளை குறித்தும், தி.மு.க.வினர் ஆதி திராவிடர் மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவதூறாக பேசியிருக்கிறார்.

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை...! - தி.மு.க. எம்.பி ஆர்.எஸ்.பாரதி..

அதில், முரசொலி பத்திரிக்கையின் மூலப்பிரதியை ஸ்டாலினால் காட்ட முடியுமா? என பேசினார். நான் முரசொலி பத்திரிக்கையின் மூலப்பிரதியை அவரிடம் காட்டியபோது அவரும் பரிசீலனை செய்தார். ஆனால், எல்.முருகன் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். முன்னதாக, எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், விசாரணை துவங்குவதற்கு முன் அவர் எம்.பி ஆகிவிட்டார்.

அதனால் தற்போது வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. விசாரணையில், நான் பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என கூறியதுடன் எல்.முருகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். முரசொலி பத்திரிக்கையின் மூலப்பிரதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளோம். சம்மனுக்கு பின் அவர் ஆஜராகிய பிறகே தீர்ப்பு வழங்கப்படும். பா.ஜ.க.விற்கு பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு  இல்லை. 

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை...! - தி.மு.க. எம்.பி ஆர்.எஸ்.பாரதி..

மாரிதாஸ் தொடர்பான அவதூறு வழக்கில் காவல் துறை மூலம் எப்.ஐ.ஆர் போடப்பட்டது முதல், என்னவெல்லாம் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காக குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்க வேண்டும். அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை. அண்ணாமலை தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு குறித்து தவறாக பேசியிருக்கிறார். இதிலிருந்தே அண்ணாமலை ஒழுக்கமான காவல்துறை அதிகாரி அல்ல என்பது தெரியவருகிறது" இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் படிக்க : WATCH VIDEO : ‛இரு தவணை... முதலில் அட்வான்ஸ் கொடு...’ லஞ்சத்தை கொஞ்சமும் கூசாமல் கேட்கும் அதிகாரி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

‛கடலா... ஆகாயமா... சில்வண்டு சிக்கும்... சிறுத்தை சிக்காது’ பறக்கிறாரா மிதக்குறாரா ராஜேந்திர பாலாஜி?

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget