Stalin swearing-in ceremony LIVE : அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எல்.ஏ கோ.வி செழியன்
DMK MK Stalin swearing-in ceremony : இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்றுக் கொள்கின்றனர்
LIVE
Background
MK Stalin CM: 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனையடுயத்து, கூட்டனியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மு. க. ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு க ஸ்டாலின் பரிந்துரைத்துள்ள 33 அமைச்சர்கள் பட்டியலுக்கு ஆளுநர்திரு பன்வாரிலால் புரோஹித் முன்னதாக ஒப்புதல் வழங்கினார். அதன்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, காவல், உள்துறை உள்ளிட்ட துறைகளை கவனிப்பார்.
நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக கே என் நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சராக ஐ பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சராக திரு பொன்முடி, பொதுப் பணித்துறை அமைச்சராக எ வ வேலு,
வேளாண் துறை அமைச்சராக எம் ஆர் கே பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சராக மா சுப்ரமணியன் , நிதி அமைச்சராக திரு பழனிவேல் தியாகராஜன், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி , உள்ளிட்ட 34 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
அரசு கொறடாவாக எம்.எல்.ஏ கோ.வி செழியன் நியமனம்.
தமிழக அரசு தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் எம்.எல்.ஏ கோ.வி செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டுக்கு 40 மெட்ரிக் ஆக்சிஜனை, அடுத்த 4 நாட்களுக்குள் வழங்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கெடுத்ததில் பெருமைகொள்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் கழக தலைவர் @mkstalin அவர்கள்.
— Udhay (@Udhaystalin) May 7, 2021
பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தலைவர் தலைமையிலான கழக அரசு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தப்போவது உறுதி. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்றதில் பெருமைகொள்கிறேன். pic.twitter.com/qZIoDtBJwa
உள்ளதை உள்ளபடியே சொல்லுங்கள் - முதல்வர் மு.க ஸ்டாலின்
உள்ளதை உள்ளபடியே சொல்லுங்கள் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில், தனது முன்னுரையில் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின், அனைவரும் இணைந்து இந்த பேரிடரை சமாளிப்போம் என தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டம்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது