MK STALIN : ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
DMK leader Stalin's trip to London : தமிழக அரசியல் பல்வேறு மாற்றங்களை தினந்தோறும் சந்தித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் 15 நாள் பயணமாக லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியை இழந்த திமுக
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் 2.O ஆட்சி அமையும் என திமுக தலைமை நம்பியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலையே தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆரம்பித்த 2 வருடங்களில் ஆட்சியை பிடித்து அனைத்தையும் மொத்தமாக மாற்றியது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சியின் உதவியோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தவெக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின்வெட்டுக்கு எதிராக பல போராட்டம் நடைபெற்று வருகிறது.
லண்டன் செல்லும் ஸ்டாலின்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் லண்டனுக்கு 15 நாள் பயணமாக குடும்பத்தோடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். விளையாட்டு மேம்பாடு தொடர்பாக பட்டப்படிப்பு படித்து வந்த அவர், தற்போது படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் கலைஞர் தொலைக்காட்சியில் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
லண்டனில் 15 நாள் ஓய்வு
இது மட்டுமில்லாமல் உதயநிதி கவனித்து வந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தையும் இன்பநிதி கவனித்து வருகிறார். இந்த நிலையில், இன்பநிதி படித்த கல்லூரியில் ஜூலை மாதம் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க இன்பநிதியின் தாத்தாவும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, பேரன் இன்பநிதி ஆகியோர் ஜூலை 5-ந் தேதி லண்டன் புறப்பட்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின், சுமார் 10 நாட்கள் லண்டனில் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ,இதனையடுத்து ஜூலை 20ஆம் தேதிக்கு பிறகு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















