மேலும் அறிய

EPS: “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; கூட்டணி இதனால்தான்...” - இபிஎஸ் திட்டவட்டம்

அதிமுக அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான மடிக்கணினித் திட்டத்தினை திமுக அரசு கைவிட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றாம் சாட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசும் போது, அதிமுக அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான மடிக்கணினித் திட்டத்தினை திமுக அரசு கைவிட்டுவிட்டதாக குறிப்பிட்டு பேசினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “ அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்பாடு சிரிப்பைத்தான் வரவைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு அமைச்சரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்காமல், அமைச்சராகவே தொடரவைப்பது அரசியல் நாகரீகமல்ல. ஊழல் குற்றம் செய்தவர் எந்த கட்சியாக இருந்தாலும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிப்பது தான் அரசியல் நாகரீகம். கடந்த கால வரலாற்றை பாருங்கள், திமுக ஆட்சியில் அதாவது கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், அருணா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட போது, அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். என்.கே.கே.பி ராஜா நிலம் அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்டபோது அவரையும் கலைஞர் அமைச்சரவையில் இருந்து விடுவித்தார். அதேபோல், அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அக்ரி கிருஷ்ணன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு வந்த போது அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவையெல்லாம் தமிழகத்தின் கடந்த கால வரலாறு. மேலும், தேர்தல் அடிப்படையில் கூட்டணி என்பது தேர்தலின் போது தான் முழு வடிவம் பெறும், அதுவரை அவரவர் தங்களது கருத்துக்களை கூறிக்கொண்டு தான் வருவார்கள். அதிமுக கொள்கை அடிப்படையில் தான் கூட்டணியே தவிர, அதிமுக அடிமைக் கட்சி கிடையாது. திமுக தான் அடிமைக் கட்சி” என கூறினார். 

மேலும் அவர், “ இது ஜனநாயக நாடு,  நடிகர் விஜய் அவருடைய கருத்தைச் சொல்ல அனைத்து உரிமையும் உண்டு. வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 இடங்களிலும், பாண்டிச்சேரியில் ஒரு இடமும் என முழுவதும் கைப்பற்ற அதிமுகவினர் முழுமையான பணிகளை செய்து வருகின்றனர்” எனவும் அவர் கூறினார்.

நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட காலம் முதல் அதிமுக எதிர்த்து வருகிறது.  நீட் தேர்வினை கொண்டுவந்தது திமுகவும் காங்கிரஸ்ஸும் தான். எனக்கு வந்த தகவலின் படி, தற்போது நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நான் முதலமைச்சராக இருந்த போது, நானும் அரசுப் பள்ளியில் படித்தவன் என்பதால், என்னால் அரசு பள்ளியின் சூழலை புரிந்து கொண்டதால் தான், நீட் தேர்வுக்கான தற்போதைய தீர்வாக 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு  கொண்டுவரப்பட்டது. அரசு பள்ளியில் 3 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள் கிட்டத்தட்ட 41 சதவீதம். இதில் 2017 - 18 கல்வியாண்டில், 9 பேர் மட்டும் தான் மருத்துவபடிப்புக்கு சென்றனர். இதனை எண்ணிப்பார்த்து தான் உள் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. உள்இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என அறிவித்தேன். கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Embed widget