மேலும் அறிய

திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்.. முதல்வர் உரையை புறக்கணித்து, ஈ.பி.எஸ் விமர்சனம்

கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுபோயுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பழனிசாமி, ”திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்யான விளம்பரம் என்றும், அதிமுகவின் திட்டங்களைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், புதிதாக எந்த திட்டங்களையும் திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கவில்லை எனவும் கூறினார். கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுபோயுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 50 ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு” என்றும் கூறினார்.

முன்னதாக, தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். பலவற்றில் திமுக அரசின் அணுகுமுறையை கண்டு மக்கள் முகம்சுளிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பூரண மதுவிலக்கு குறித்து திமுக பேசாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடிவரும் நிலையில், திமுக அரசின் ஓராண்டை விமர்சிக்கும் வகையில் சென்னை முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. திமுக ஆட்சி ஓராண்டு ஆனதையொட்டி கருணாநிதி படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் முதலமைச்சர் வாழ்த்து பெற்றார். இதனைத்தொடர்ந்து, மாநகர் பேருந்தில் திடீரென்று ஏறி ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு, தலைமைச்செயலகத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில், திமுக அரசின் ஓராண்டை விமர்சிக்கும் வகையில் சென்னை முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில், ”விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை. இருளில் தவிக்கும் தமிழகம். மின்மிகை To மின்வெட்டு” என்று எழுதப்பட்டுள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இந்த போஸ்டர் ஒட்டுப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget