மேலும் அறிய
Advertisement
பதவி கிடைத்துவிட்டது என்று திமிராக இருக்கக்கூடாது - அமைச்சர் பன்னீர்செல்வம் கொடுத்த அட்வைஸ்
இமேஜை கெடுக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. கிடைத்ததை வைத்து நாம் மக்களுக்கு நன்மை செய்து, நல்ல முறையில் நடந்து கொண்டால் நமக்கு சமுதாய அந்தஸ்து கிடைக்கும்.
பதவி கிடைத்துவிட்டது என்று திமிராக இருக்கக்கூடாது, இமேஜை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது கடலூரில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அட்வைஸ் கொடுத்துள்ளார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். கடலூர் எம்.எல்.ஏ., ஐயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரை சரவணன், இளபுகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி குறித்து கட்சி நிர்வாகிகள் கருத்தை கேட்டறிந்து பின்னர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வேளாண்மை துறை அமைச்சருமான பன்னீர்செல்வம் பேசினார்.
”கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 10 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள், 1 மாநகராட்சி ஆகியவற்றில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான உழைப்பில் கிடைத்த வெற்றி. 8 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இந்த வெற்றி. கடந்த சட்டமன்ற தேர்தலில் புவனகிரி,சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை நாம் இழந்துவிட்டோம். இதில் எனக்கு மிகுந்த வருத்தம் இருக்கிறது. தேர்தல் என்றால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்,. அப்போது தான் வெற்றி பெற முடியும்.
கட்சி நிர்வாகியாகிய உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பொறுப்பு நிச்சயம் கிடைக்கும். நான் யாரையும் கழுத்து அறுக்க மாட்டேன். கோபம் வந்தால் திட்டுவேன். நிச்சயம் உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். நம் ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையில் காட்சியினர் தலையீடு இல்லை, யாரையும் மிரட்டவும் இல்லை அதனால்தான் இந்த வெற்றி நமக்கு உள்ளாட்சியில் கிடைத்துள்ளது. வெற்றி பெற்றுள்ளவர்கள் பதவி கிடைத்து விட்டது என்று திமிராக இருக்கக்கூடாது, இமேஜை கெடுக்கும் வகையில் நடக்கக் கொள்ள கூடாது. கிடைத்ததை வைத்து நாம் மக்களுக்கு நன்மை செய்து, நல்ல முறையில் நடந்து கொண்டால் நமக்கு சமுதாய அந்தஸ்து கிடைக்கும்.
மக்கள் மதிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் .பொறுத்தார் பூமி ஆள்வார். தமிழக முதல்வரின் பிறந்த நாளை கிராமம் கிராமமாக அனைத்து கிளைகளிலும், பேரூர்,நகரத் திலும் விமரிசையாக கொண்டாடி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்” என கூறினார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு நன்றி தெரிவித்தும், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முன்னாள் எம்.எல்.ஏ., மருதூர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் குணசேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion