Special Train: காசிக்கு போகணுமா? உங்களுக்காகவே ஸ்பெஷல் ட்ரெயின்.. எங்கே? எப்போது? முழு விவரம் இதோ..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசியில் இருந்து வாரணாசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை ரயில் இயக்கப்படுகிறது.
![Special Train: காசிக்கு போகணுமா? உங்களுக்காகவே ஸ்பெஷல் ட்ரெயின்.. எங்கே? எப்போது? முழு விவரம் இதோ.. Diwali Ganga snana Yatra train is being operated from Tenkasi to Varanasi under Bharat Gaurav scheme on the occasion of Diwali on nov 9 Special Train: காசிக்கு போகணுமா? உங்களுக்காகவே ஸ்பெஷல் ட்ரெயின்.. எங்கே? எப்போது? முழு விவரம் இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/03/09dd4e3e7a3d454946944bda0f92e05f1691051451278589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
‘தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை’க்கு தென்காசியில் இருந்து வாராணாசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் பல சுற்றுலாத்தளங்கள் மற்றும் ஆன்மீக தளங்களை மக்கள் எளிதாக சுற்றிப்பார்ப்பதற்கு இந்திய ரயில்வே துறை பாரத் கௌரவ் ரயில்கள் திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த்து. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து கயா, ஷீரடி, காசி, வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காசி யாத்திரைக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்காகவே வரும் தீபாவளி பண்டிக்கைக்கு தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நவம்பர் 9 ஆம் தேதி தென்காசியில் இருந்து இயக்கப்படுகிறது. மதியம் 3.50 மணிக்கு புறப்படும் ரயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை வருகிறது. தொடர்ந்து மறுநாள் விஜயவாடா, வாரங்கல், பல்கர்ஷா சென்றடைந்து, 11 ஆம் தேதி பிரயாக்ராஜ் சங்கம் வழியாக இரவு 10.30 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது.
பின், நவம்பர் 13 ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, சிதம்பரம், தஞ்சாவூர், மண்டபம் (ராமேஸ்வரம்) வழியே தென்காசிக்கு சென்றடைகிறது. பிரயாக்ராஜ், வாரணாசி (காசி), கயா மற்றும் ராமேஸ்வரம் போன்ற ஆன்மீக சுற்றுலாத்தளங்கள் உள்ளடக்கிய "தீபாவளி கங்கா ஸ்னான யாத்திரை" யாத்ரீகர்களுக்கும் பயணிகளுக்கும் ஒரு புதுவிதமான அனுபவத்தை அளிக்கும் என்றும், புனிதமான தீபாவளி பண்டிகையின் போது பயணிகள் புனிதமான கங்கா ஸ்நான சடங்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் (3ac) 3, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (sleeper class) 8 இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பிற்கு ஒரு நபருக்கு ரூ. 16,850 கட்டணமும், அதே சமயம் ஏ.சி வகுப்பைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் ரூ. 30,500 கட்டணமும் செலுத்த வேண்டும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ரூ.15,850 மற்றும் ரூ.29,100 என கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலா பயணிகளும் வாக்காளர் அடையாள அட்டை/ஆதார் மற்றும் கோவிட்-19 இறுதி தடுப்பூசி டோஸ் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Jailer Trailer: தலைவரு எப்போதுமே தாறுமாறு... ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த ‘ஜெயிலர்' ட்ரெய்லர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)