Diwali 2023: பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?- கரூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கரூர் தீயணைப்பு நிலைய அதிகாரி திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களிடம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
![Diwali 2023: பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?- கரூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு Diwali 2023 Bursting firecrackers as safety for school students in Karur fire department alert TNN Diwali 2023: பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?- கரூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/11/0b9cd8617a813476fbc4911345e88f7f1699682265517113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூரில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
நாடு முழுவதும் தீப ஒளி பண்டிகை நவ.12-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. தீப ஒளி பண்டிகையை முன்னிட்டு, தீயணைப்புத் துறை சார்பில் கரூரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கரூர் தீயணைப்பு நிலைய அதிகாரி திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களிடம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் அரசு நடுநிலை பள்ளியில் 36வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர் வசுமதி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இனிப்பு , பட்டாசு பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட தீயணைப்புத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பட்டாசுகளை எப்படி வெடிப்பது. எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருப்பது. தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து செயல்முறை விளக்கமளித்தனர் இதே போல பல்வேறு இடங்களில் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)