ரூ.21,000 மாதச் சம்பளம்..! குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. விவரங்கள் பின்வருமாறு
மாத சம்பளம் ரூபாய் 21,000 /- சிவகங்கை மாவட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஆற்றுப்படுத்தனர் வேலை இடங்கள் காலியாக உள்ளன. பணிக்கு விண்ணப்பிக்க 26-ஆம் தேதி தான் கடைசி நாள்.
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. விவரங்கள் பின்வருமாறு
பணி - பாதுகாப்பு அலுவலர் .
காலி பணியிடங்கள் - 1
சம்பளம் - ரூபாய் - 21,000/-
வயது - 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி - இளங்கலை / முதுகலை பட்டதாரி (10, +2, +3 மாதிரி) உளவியல் சமூகப்பணி ,/ சமூகவியல்களின் வழிகாட்டுதல் மற்றும் குழந்தைகள் நல குற்றவியல் கல்வி ஆகிய கல்வியில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். குழந்தை சார்ந்த பணியில் 3 வருடங்கள் முன்அனுபவம் பெற்றவராகவும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.குரூப்-B அல்லது அதற்குமேல் பணி செய்திருக்கவேண்டும்
பணி - ஆற்றுப்படுத்துனர்.
காலி பணியிடங்கள் - 1
சம்பளம் - ரூபாய் - 14,000/-
வயது - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி - இளங்கலை / முதுகலை பட்டதாரி (10, +2, +3 மாதிரி) உளவியல், / சமூகப்பணி , / சமூகவியல்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் பட்டம் பெற்றிருக்கவேண்டும். குழந்தை சார்ந்த பணியில் 2 வருடங்கள் முன்அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை - அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் வாங்கி, அதில் கேட்ட தகவல்களை நிரப்பி,
"மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,9771-1 பெரியார் நகர், முதல் தெரு,அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில்,திருப்பத்தூர் சாலை,சிவகங்கை – 630561” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எந்த விண்ணப்ப கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 26 / ஜூலை / 2021