மேலும் அறிய
Advertisement
மதம் மாறச்சொன்னதால் மாணவி தற்கொலையா? - போலீஸ் தங்களை மிரட்டுவதாக பெற்றோர் நீதிமன்றத்தில் புகார்
வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல்
தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த +2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை, செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து நீதிபதி சுவாமிநாதனிடம் அவசர வழக்காக எடுக்க கோரினார். அதற்கு நீதிபதி மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என கோரினார். பின்னர் மனுதாரர் தரப்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி, காவல்துறையினர் மீது சிறுமியின் பெற்றோரை மிரட்டுவதாக புகார் முன் வைக்கப்படுகிறது. எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்கை விசாரிக்க அறிவுறுத்தி ஜனவரி 24ஆம் தேதிக்கு இந்த வழக்கை விசாரணைக்காக பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion