தருமபுரி: பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; ஒகேனக்கல்லில் பரிசலுக்கு மட்டும் அனுமதி
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு அடிப்படையாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு:
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. தற்போது, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று அதிகரித்து வினாடிக்கு 14,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
குளிக்க தடை:
மேலும் வெள்ளப்பெருக்கின் போது, ஒகேனக்கல்லில் பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, பரிசல் செல்ல மட்டும் அனுமதி வழங்கியும், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக மாறி, மாறி வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் மற்றொரு செய்தி
புரட்டாசி தினத்தையொட்டி, காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்ததால், காய்கறிகள் விலை உயர்வை சந்தித்தன.
புரட்டாசி விரதம்:
தருமபுரி உழவர் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 30 டன் அளவிற்கு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாதங்களில் இறைச்சி உண்ணாமல் விரதம் இருந்து வருகின்றனர். இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விரதம் என்பதால், தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் உழவர் சந்தையில், கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து விற்பனையானது.
காய்கறிகளின் விலை உயர்வு:
இதில் தக்காளி ரூ.28, கத்திரிக்காய் ரூ.30, வெண்டை ரூ.20, முள்ளங்கி ரூ.16, கொத்தவரை ரூ.34, முருங்கை ரூ.60, பச்சை மிளகாய் ரூ.40 என விற்பனயானது. இதில் வெண்டைக்காய் மட்டும் குறைவாக இருந்ததால், ஒருசிலர் கிடைக்காமல், ஏமாற்றம் அடைந்தனர். இன்று மட்டும் 140 விவசாயிகள் கடை போட்டு இருந்தனர்.
இன்று காய்கறிகளை வாங்க 9 ஆயிரத்து 409 நுகர்வோர் வருகை புரிந்தனர். மேலும் பழங்கள் காய்கறிகள் என மொத்தம் 37 டன் எடையுள்ள காய்கறிகள் 13.42 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, பொதுமககள் வருகையும் அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி- தருமபுரி சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது