SAC Advice to Dhanush: தொலைத்த இடத்திலே தேடவேண்டும்.. தனுஷுக்கு எஸ்.ஏ.சி கொடுத்த அட்வைஸ்..!
யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது ஒரு நலம்விரும்பியின் குரல், இன்னும் சொல்லப்போனால் ஒரு ரசிகனுடைய குரல் - எஸ்.ஏ. சந்திரசேகர்
தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம்.
இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.
அதேசமயம் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மகன்கள் இருப்பதால் அவர்களது நிலைமையை இரண்டு பேரும் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில், இயக்குநரும், நடிகர் விஜய்யும் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இந்த செய்தி கனவாகவோ, பொய்யாகவோ இருக்கக்கூடாதா என்ற ஆசை இருக்கிறது.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் நமக்கும் கீழே இருப்பவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு என கண்ணதாசன் எழுதியிருப்பார்.
தி.நகரில் பர்ஸை தொலைத்துவிட்டு திருவல்லிக்கேணியில் தேடக்கூடாது. வாழ்க்கையை தொலைத்த இடத்தில்தான் தேடவேண்டும். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இது ஒரு நலம்விரும்பியின் குரல், இன்னும் சொல்லப்போனால் ஒரு ரசிகனுடைய குரல்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: பேஸ்புக் நட்பால் விபரீதம்...! 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிம் மாஸ்டர்...! - 2 ஆண்டுகளாக 4 மாநிலங்களில் பைக்கில் சுற்றியது அம்பலம்
Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா மனதை மாற்றிய இமயமலைப் பயணம்! தனுஷை பிரிய இதுதான் காரணமா?