மேலும் அறிய
Advertisement
பேஸ்புக் நட்பால் விபரீதம்...! 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிம் மாஸ்டர்...! - 2 ஆண்டுகளாக 4 மாநிலங்களில் பைக்கில் சுற்றியது அம்பலம்
நரசிம்மன் சென்ற இடங்களில் உள்ள சாலைகளில் இருந்த 30 சிசிடிவி கேமராக்களை வைத்தும், சிம்கார்டு முகவரியை வைத்து ஆந்திராவில் தங்கியிருந்தவரை தருமபுரி காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் நரசிம்மன் (26). இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக இருவரும் நரசிம்மனை பிரிந்து சென்று விட்டனர். இந்தநிலையில் தருமபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு படித்த சிறுமிருடன் நரசிம்மனுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பெங்களூருவில் இருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தருமபுரி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி தருமபுரி நகர காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை சிறுமியின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தனர். மேலும் நரசிம்மனின் செல்போன் எண்ணை கொண்டு அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் இஷ்ணாபூரில் ஜிம் மாஸ்டர் நரசிம்மன் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கானா சென்ற காவல் துறையினர் நரசிம்மனை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பள்ளி சிறுமியை கடத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே அவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
மேலும், ஆசைவார்த்தை கூறி சிறுமியிடம் பலமுறை பாலியல் உறவு வைத்து கொண்டுள்ளார். மேலும் கோவை-திருச்சூர் செல்லும் வழியில் ஒரு கோயிலில் வைத்து நரசிம்மன் சிறுமிக்கு தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பைக்கில் அழைத்து சென்று தங்கி உள்ளார். ஆனால் செல்லும் ஒவ்வொரு இடத்திலும், 3 முதல் 20 நாட்கள் வரையே தங்கியுள்ளார். இதில் தங்குவதற்கு தேவையான பணத்திற்காக 150 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனத்தை திருடியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமியை பிரசவத்திற்காக சென்னை பள்ளிக்கரணையில் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். தொடர்ந்து குடும்பம் நடத்த பணம் தேவைப்பட்டதால், ஆன்லைன் சூதாடுவதற்கு தேடியுள்ளார். அப்போது ஒரு கடை உரிமையாளரை நம்ப வைத்து ரூ.1.12 இலட்சம் மோசடி செய்துள்ளார். தொடர்ந்து நரசிம்மன் சென்ற இடங்களில் உள்ள சாலைகளில் இருந்த 30 சிசிடிவி கேமராக்களை வைத்தும், சிம்கார்டு முகவரியை வைத்து ஆந்திராவில் தங்கியிருந்தவரை தருமபுரி காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது சிறுமிக்கு 8 மாத ஆண் குழந்தை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நரசிம்மனை, தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தெலுங்கானாவில் இருந்த சிறுமி மற்றும் அவரது 8 மாத குழந்தையை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion