(Source: ECI/ABP News/ABP Majha)
கரூரில் கடும் வெயிலில் தண்ணீர் இல்லாமல் நின்ற பக்தர்கள் - அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்
கரூரில் தென்திருப்பதி என்று அன்போடு அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் தான்தோன்றிமலைகோவிந்தா கோஷத்துடன் குவிந்த பக்தர்கள், கடும் வெயிலில் குடிநீர் கூட இல்லாத அவல நிலையில் பக்தர்கள் காத்திருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில்:
தென்திருப்பதி என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் பல மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகளை முறையாக ஏற்பாடு செய்யாததால் பக்தர்கள் கடும் வெயிலில் குழந்தைகளுடன் பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும் பக்தர்கள் குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லாத சூழ்நிலை இருந்தது. ஒரு இடத்தில் மட்டும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் வரிசையில் நின்ற பல பக்தர்கள் குடிநீர் இல்லாமல் அவதிக்குள்ளாகினர். தனியார் திருமண கூட்டத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நவராத்திரி பண்டிகை:
கரூரில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை - கடோத்கஜன் முதல் சோட்டா பீம் வரை பல்வேறு வகையான பொம்மைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 15-முதல் 23-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இக்கண்காட்சியில் கொலு படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள், அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட லட்சுமி, அஷ்ட வராகி அம்மன், அத்திவரதர் சயனம் மற்றும் நின்ற கோலம், கடோத்கஜன் செட், வளைகாப்பு செட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான சோட்டா பீம், பள்ளிக்கூட செட், கிரிக்கெட் செட் ஆகிய மாதிரி பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன. மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக கடந்தாண்டை விட பொம்மைகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial