விவேக் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு - துணை முதல்வர் ஓபிஎஸ்

நடிகர் விவேக்கின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்தார்.

நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.விவேக் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு - துணை முதல்வர் ஓபிஎஸ்

இந்நிலையில், நடிகர் விவேக்கின் மறைவுக்கு துணை முதலைமச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர். பத்மஸ்ரீ விவேக்கின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.

பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.
— O Panneerselvam (@OfficeOfOPS) April 17, 2021

தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை  மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார். விவேக்கின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நடிகர் விவேக் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுரலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் விவேக்கின் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி, சிந்திக்கவும் வைத்துள்ளது. பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர். கலைச்சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பாகும். அவரின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது’ என புகழஞ்சலி செலுத்தினார்.

Tags: actor Vivek cardiac arrest Vivek death deputy cm o.pannerselvam Vivek Death Cardiac Arrest vivek actor vivek vivek actor tamil actor vivek vivek age actor vivek news yuvarathnaa actor vivek age vivek family vivek news vivek tamil actor vikram vivek family photos vivek tamil actor vivek family comedian vivek விவேக் vivek images vivek son vadivelu vivek death

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சாட்டை திருமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

சாட்டை திருமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

TamilNadu Admissions: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

TamilNadu Admissions: 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Women as Priests : இனி பெண்கள் விரும்பினால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு..!

Women as Priests : இனி பெண்கள் விரும்பினால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும்  - அமைச்சர் சேகர் பாபு..!

டாப் நியூஸ்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!