TN Rains: உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! 25ம் தேதி தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை - முழு விவரம் இதோ..
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காலை 8.30 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது
திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே 420 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து (தமிழ்நாடு) தென்கிழக்கே 600 கி.மீ., சென்னைக்கு (தமிழ்நாடு) தென்கிழக்கே 690 கி.மீ. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து அதன் பின்னர் படிப்படியாக மேற்கு தென்மேற்கு திசையில் இலங்கை பகுதியை அடுத்த 48 மணித்தியாலங்களில் நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 25-ம் தேதி தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மீனவர்கள் டிசம்பர் 22ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். டிசம்பர் 25-ம் தேதி தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
23.12.2022, 24.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
25.12.2022: தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதன் காரணமாக சென்னை, என்னூர், காட்டுப்பள்ளி, நாகை, கடலூர், பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் முதலாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.