மேலும் அறிய

“கன மழை பெய்தும் பயனில்லை” மேட்டூரில் நீர்வரத்து 15,531 அடியாக குறைந்தது..!

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6,445 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 17,596 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 15,531 கன அடியாக குறைந்துள்ளது.

“கன மழை பெய்தும் பயனில்லை” மேட்டூரில் நீர்வரத்து 15,531 அடியாக குறைந்தது..!

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 90.87 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 53.65 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

“கன மழை பெய்தும் பயனில்லை” மேட்டூரில் நீர்வரத்து 15,531 அடியாக குறைந்தது..!

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜிGovernor RN Ravi | ”காப்பாத்துங்க சார்.. முடியல..”ஆளுநரிடம் மாணவர் பகீர்!பதறிய அமைச்சர் கோவி.செழியன்Kallakurichi : கள்ளச்சாராய விற்பனை ஜோர் கள்ளக்குறிச்சியில் மீண்டும் பகீர்.. ஆக்‌ஷனில் இறங்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பை -  8 கேட்ச், 2 ரன் -அவுட்களை தவறவிட்ட பாகிஸ்தான், இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பை - 8 கேட்ச், 2 ரன் -அவுட்களை தவறவிட்ட பாகிஸ்தான், இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
Embed widget