மேலும் அறிய

Jeyakumar: ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றமில்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தடாலடி!

ஒற்றைத்தலைமை முடிவில் மாற்றமில்லை என்று எடப்பாடி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் பேட்டி அளித்துள்ளார். 

ஒற்றைத்தலைமை முடிவில் மாற்றமில்லை என்று எடப்பாடி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் பேட்டி அளித்துள்ளார். 

ஈபிஎஸ்ஸை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயகுமார், “ ஒற்றைத்தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவும் இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவு செய்யும். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்புக் கொடுக்கிறோம்." என்று பேசியிருக்கிறார். 

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நேற்று நடந்தது.   

ஓபிஎஸ் தரப்பு வாதம்

இந்த விசாரணையில், ஓபிஎஸ் தரப்பு “பொதுக்குழு நடத்தலாம். ஆனால் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவரக்கூடாது. பொதுக்குழுவை வழக்கமான முறையில் நடத்த எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமையை மாற்றும் திருத்தங்களை செய்யக்கூடாது.” என்று வாதிட்டது. 


23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் 

மேலும், “ கடந்த டிசம்பரில் உட்கட்சித் தேர்தல் நடந்து ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அந்தப்பதவிக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. 23 வரைவு தீமானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது.

23 வரைவு தீர்மானங்களின் நகல் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை. இந்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு புதிதாக தீர்மானங்களை சேர்க்கக்கூடாது. அதிமுக விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன் எனவும் ஓ.பி.எஸ் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 

எடப்பாடி தரப்பு வாதம்: 

2017ல் பொதுக்குழு தீர்மானம் மூலம்தான் அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டன என்று ஈ.பி.எஸ். தரப்பு வாதிட்டது. 

எடப்பாடி தரப்பு வாதத்தில், “ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொது குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், நடக்காது என உத்தரவாதமாக சொல்ல முடியாது. எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும், அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கொள்கை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்துக்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது.

பொதுக்குழுவில் திருத்தம் நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம்.பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம். அஜெண்டா இல்லாமல்தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியுள்ளனர்.

பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும், பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும். எந்த விதியையும், நீக்கவோ, சேர்க்கவோ 2665 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. ஆகையால் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு , “ எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும். பொதுக்குழுவில் முடிவுகளை காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். பொதுக்குழுவில் செயல் திட்டத்தை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவில் சிலர் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் எடுக்க கூடாது” என்று  வாதிடப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பொதுக்குழு நடத்த தடைக்கேட்ட வழக்குகளில் எந்த முகாந்திரமும் இல்லாத காரணத்தால் மனுக்களை தள்ளுபடி செய்து பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதியளித்தது. இந்த நிலையில் இரவோடு இரவாக அதை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில், ஒற்றைத்தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்தது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? உதயநிதிக்கு தவெக கேள்வி
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget