மார்கழி மாத ராசி பலன் 2025 - விருச்சிக ராசி
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்...

வாசகர்களே மார்கழி மாதத்தில் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்... குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாத அளவிற்கு வேளையில் மிகுந்த பிஸியாக இருந்தீர்கள்.. தற்பொழுது குடும்பத்தாரோடு சேர்ந்து வெளியிடங்களுக்கு போய் வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.... புதிய பல மாற்றங்களை சந்திப்பீர்கள்... நான்காம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்து அடுத்தடுத்த காரியங்களை நகர்த்தும்படி உங்களை உந்திக் கொண்டே இருப்பார்.... ஓரிடத்தில் நீங்கள் நிலையாக இருக்க சனிபகவானை வழிபடுங்கள்... மார்கழியில் உங்களுடைய கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்... வீணாக யார் எதைப் பற்றி என்ன பேசினாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள்...
உங்களுக்கான வெற்றி உங்கள் கையில் தான் இருக்கிறது.... வேலை நிமித்தமாக சில தொந்தரவுகள் உங்களுக்கு இருக்கலாம்... இடம் வேலை மாறக்கூடிய வாய்ப்புகளும் உருவாகலாம்... அவற்றை எடுத்துக் கொள்ள ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.... புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.. அல்லது நீங்களாகவே வாய்ப்புகளை உருவாக்கலாம்... ஆனால் அந்த வாய்ப்புகளில் இருக்க கூடிய நிலைத்த தன்மையை பற்றி சிந்தியுங்கள்... உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்... அந்த வேலை உங்களுக்கான வேலை தானா அந்த வேலையில் நிரந்தர வருமானம் கிடைக்குமா? அந்த வேலை குறித்தான சிக்கல்கள் ஏதும் இல்லையா என்பது குறித்து தீர விசாரித்து அந்த வேலையை எடுத்துக் கொள்வது சிறப்பு....
பெரிய மாற்றங்களை எதிர்கொள்வதற்கான காலகட்டம்... ஜனவரி மாதத்திற்கு பிறகு செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் உச்சம் பெறுகிறார்.. அப்படி என்றால் ராசி அதிபதியே மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெரும்பொழுது துணிச்சலாக பல முடிவுகள் எடுப்பீர்கள்.... எதற்கும் துணிந்து அதை முன்னிறுத்தி அதில் வெற்றி காணும் சக்தியும் உங்களுக்கு உண்டு... முருகப்பெருமானின் அருள் ஆசை உங்கள் ராசியின் மீது பதிவாவதால் எடுக்கின்ற காரியங்களில் ஜெயம் உண்டாகும்....
பண தேவை இருக்கிறது எங்கேயாவது கடன் கேட்டால் கிடைக்குமா என்றால் ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் முயற்சி செய்யுங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.... கால் வலி கணுக்கால் வலி மூட்டு வலி போன்றவை ஏற்படும்.... ராசி அதிபதி செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டில் சூரியனோடு பிரவேசிக்கும் காலகட்டங்களில் முகத்தில் சில தழும்புகள் ஏற்படவோ அல்லது அடி படவோ வாய்ப்பு இருக்கிறது.... நடக்கும்பொழுது அவர் பொழுதோ பார்த்து அமருங்கள்....
சனி பகவானை மனதார வழிபட்டால் சங்கடங்கள் சுலபமாக தீரும்.. சனிக்கிழமை தோறும் சனிபகவான் ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்... ஐந்தாம் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் தன்னுடைய ஏழாம் பார்வையாக 11-ம் வீட்டை பார்ப்பதால் கடின உழைப்பு மூலமாக லாபம் கிடைக்கும்... ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதற்கான சம்பாத்தியம் வாங்குபவர்கள் தனி.... அதுவே ஓர் அலுவலகத்தில் ஓவர் டைம் என்று சொல்லக்கூடிய ஷிப்ட் நேரங்களை தாண்டி வேலை பார்த்தால் அவர்களுக்கு கிடைக்க கூடிய ஊதியம் போன்றவை உங்களுக்கு இந்த காலகட்டங்களில் நன்றாக அமையலாம்... அடுத்து வரக்கூடிய ஒன்றரை வருடங்களுக்கு சனி பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பார்.... ஒரு வேலைக்கு இரண்டு வேலையாக பார்த்து கூட நீங்கள் சம்பாத்தியத்தை உயர்த்திக் கொள்ளலாம்... மார்கழி மாதம் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள் வணக்கம்....





















