Cyclone Mandous: அடுத்த 3 மணி நேரத்திற்கு 38 மாவட்டங்களில் மழை.. எந்தெந்த மாவட்டம் ? எங்கே கன மழை ?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 38 மாவட்டஙகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழையும் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-12-09-07:07:52 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/phdpqT1b6Y
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 9, 2022
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-12-09-06:58:47 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பொன்னேரி,அம்பத்தூர்,மாதவரம் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/RxGO8J9yCe
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 9, 2022
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-12-09-07:08:50 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக வாலாஜாபாத்,குன்றத்தூர்,பூவிருந்தவல்லி,ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/t6RY7v09XW
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 9, 2022
மாண்டஸ் புயல் காரணமாக இன்று மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை.
செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரேட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,
சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.