மேலும் அறிய

கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை விவகாரம் - முகேசனின் சகோதரருக்கு அரிவாள் வெட்டு

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள குப்பநத்தம் பழைய காலனியைச் சேர்ந்தவர் செ.சாமிக்கண்ணு மகன் முருகேசன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த கண்ணகி என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதனால், அவர்கள் இருவரையும் பெண்ணின் தரப்பினர் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்து 2003 ஆம் ஆண்டு அவர்கள்து உடல்களை எரித்தனர். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ஆணவக் கொலை வழக்கினை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பெண்ணின் உறவினர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த இருவர் உள்பட 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் கண்ணகியின் சகோதரருக்கு தூக்கு தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை விவகாரம் - முகேசனின் சகோதரருக்கு அரிவாள் வெட்டு
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதியன்று முருகேசனின் தம்பி பழனிவேல் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டார் எனவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சுய நினைவு இழந்து புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாரார் எனவும் அவரது உறவினர்கள். இது குறித்து, சாமிக்கண்ணு மற்றும் அவரது குடும்பத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவில் கூறி இருந்ததாவது,  தங்களது குப்பநத்தம் கிராமத்தில் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தங்கள் ஊரில் அய்யாசாமி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் இதனை ஏற்றுகொள்ள முடியாத நபர்கள் சிலர் ஊராட்சி மன்ற தலைவரை அவரது கடமைகளை செய்ய விடாமல் தொடர்ந்து அவரை தடுத்து வந்தனர். இந்த நிலையில் இதற்கு முன்னதாக நடந்து முடிந்த கண்ணகி முருகேசன் வழக்கில் சம்பத்தப்பட்ட நபர்கள் மற்றும் விருத்தாச்சலம் காவல் துறையினர் தூண்டுதலின் பேரில் தனது மகன் பழனிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் உணவு உண்ண கடைக்கு சென்றிருந்த பொழுது அவரை மர்ம நபர்கள் தலையில் வெட்டி விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். 
 
கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை விவகாரம் - முகேசனின் சகோதரருக்கு அரிவாள் வெட்டு
 
முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இத்தாக்குதல் குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், சம்பவம் நடைபெற்ற நாளில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டோம். அப்போது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய காவல் துறையினர் தற்போது ஒருதரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியான பின்பு 2021 ஆம் ஆண்டில் தன்னையும், மனைவி சின்னப்பிள்ளையும் தாக்கினர். அதே ஆண்டில் டிசம்பரில் மற்றொரு மகன் சுந்தரபாண்டியனும் தாக்கப்பட்டார். மூன்றாவது முறையாக மற்றொரு மகனை தாக்கி உள்ளனர். இந்த சம்பவங்களால் பயந்து போய் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறோம். எனவே, எங்கள் குடும்பத்தினை தொடர்ந்து தாக்கி வரும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும் பின்னர் அவர்கள் கூறுகையில் இது போன்று தங்களது கிராமத்தில் ஒரு சில நபர்கள் தொடர்ந்து தங்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் காரணமாக தங்களால் தங்களது சொந்த கிராமத்திலேயே நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர், மேலும் இவ்வாறு தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இந்த புகார் குறித்து மனு அளிக்கப்பட்டது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. நன்கொடையாளர்கள் பட்டியலில் நம்மாளுதான் முதலிடம்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. ஒரு நாளுக்கு 6 கோடி நன்கொடை வழங்கும் வள்ளல்!
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
Breaking News LIVE 8th Nov 2024: கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 8th Nov 2024: கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்Kash Patel : ட்ரம்ப் டிக்கடித்த CIA CHIEF..குஜராத்காரன்.. மோடியின் விசுவாசி! யார் இந்த காஷ் பட்டேல்?NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEET

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. நன்கொடையாளர்கள் பட்டியலில் நம்மாளுதான் முதலிடம்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. ஒரு நாளுக்கு 6 கோடி நன்கொடை வழங்கும் வள்ளல்!
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
Breaking News LIVE 8th Nov 2024: கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 8th Nov 2024: கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
Madurai: ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை மூப்பனார்தான் முதலில் முன்மொழிந்தார் - ஜி.கே.வாசன்
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை மூப்பனார்தான் முதலில் முன்மொழிந்தார் - ஜி.கே.வாசன்
CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன்  விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
"வேரோடு ஒழிக்கனும்" ஊழலுக்கு எதிராக சாட்டை சுழற்றிய குடியரசு தலைவர் முர்மு!
கர்நாடகா: புதுப்பிக்கும் பணியின்போது இடிந்து விழுந்த இரண்டு மாடிக் கட்டிடம் - வைரல் வீடியோ
கர்நாடகா: புதுப்பிக்கும் பணியின்போது இடிந்து விழுந்த இரண்டு மாடிக் கட்டிடம் - வைரல் வீடியோ
Embed widget