Covid 19 Vaccination: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி: முதலிடத்தில் திருவண்ணாமலை
15-18 வயது உள்ள சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,34,175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் வண்ணம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பெற்றோர்களே! எவ்விதத் தயக்கமுமின்றி 15-18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளை #COVID19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்!
— M.K.Stalin (@mkstalin) January 3, 2022
நீங்களும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்!
மக்கள் இயக்கமான இதில் உங்களின் பங்களிப்புதான் கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காக்கும்! pic.twitter.com/PsQXbKaU9C
இந்நிலையில் இன்று முதல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் 15-18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் 15-18 வயது உள்ள சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்படும் போது சிறுவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்து செலுத்தி கொள்ளலாம் என்று தமிழ்நாடு சுகாதார சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 33.46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. அதனை அடுத்து, ஒரே நாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 4,601 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )