![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Covid 19 Update: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம் என்ன?
இன்று (27-04-2023) 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
![Covid 19 Update: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம் என்ன? Covid 19 Update in kanchipuram chengalpattu 27th april 2023 5 coronavirus active cases today Covid 19 Update: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/0e993e3e6c7ed62c79c4abf5c9cf19d21682610214280109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 98781 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போ் 98768 குணமடைந்தனர். 1305 போ் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று (27-04-2023) 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 254669 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போ் 254640 குணமடைந்தனர். 2662 போ் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று (27-04-2023) 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த புள்ளி விவரங்கள் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் வெளியானவையாகும். வெளி மாவட்டங்களில் பரிசோதனை செய்து பாதிப்பு உறுதி செய்யப்பட்ட காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த புள்ளி விவரத்தில், சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,355 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது
இந்தியாவில் கடந்த புதன்கிழமை 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு 12,591 உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில தினங்களாக சற்று குறைந்து பதிவானது. நேற்றைய தினம் 9,629 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கிடு கிடுவென உயர்ந்து 9,355 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை விட சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,000-ஆக குறைந்துள்ளது.
இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,43,35,977 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,398-இல் இருந்து 5,31,424-ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.69 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 26 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,013-இல் இருந்து 57,410-ஆக குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 13,773 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 5233 பேர், தலைநகர் டெல்லியில் 4708 பேர், உத்திர பிரதேசத்தில் – 3874 பேர், தமிழ்நாடு – 3463 பேர், ஹரியானாவில் – 4394 பேர், குஜராத்தில் – 1632 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 57,410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 2,27,175 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 7 பேர், ஹரியானாவில் 2 பேர், ராஜஸ்தானில் 3 பேர், பஞ்சாபில் 2 பேர், தமிழ்நாட்டில் ஒருவர், உத்திர பிரதேசத்தில் ஒருவர், மகாராஷ்டிராவில் ஒருவர் என மொத்தமாக 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், மொத்த பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் 65,000 ஐ கடந்த தொற்று பாதிப்பு அது படிப்படியாக குறைந்து 57,000 மாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலும் பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று நான்காம் அலை என இதுவரை அறிவிக்கப்படவில்லை
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)