மேலும் அறிய

Tamil Nadu Coronavirus : தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 53 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பால் 53 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் நேற்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 681 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 ஆயிரத்து 071 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர். நேற்று மாநிலம் முழுவதம் 48 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 53 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 11 ஆயிரத்து 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 750 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 7,931 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tamil Nadu Coronavirus : தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 53 பேர் உயிரிழப்பு..

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 059-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 6 லட்சத்து 18 ஆயிரத்து 809 ஆகும். பெண்கள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 214 நபர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 36 நபர்கள் ஆவர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 6 ஆயிரத்து 973 நபர்களும், பெண்கள் 4 ஆயிரத்து 708 நபர்களும் ஆகும்.

Tamil Nadu Coronavirus : தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் 53 பேர் உயிரிழப்பு..
கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 7 ஆயிரத்து 71 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 27 ஆயிரத்து 440 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்கள். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இருப்பவர்கள் 7 ஆயிரத்து 275 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின்  எண்ணிக்கை 79 ஆயிரத்து 804 ஆகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget