மீண்டும் மீண்டும் மா... தீவிரமடையும் கொரோனா.. செங்கல்பட்டில் ஒருவர் உயிரிழப்பு..
"கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது"

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு உயிரிழந்து உள்ளார்.
கொரோனா என்ற அரக்கன்
கொரோனா என்ற பெயரை கேட்டாலுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, லாக்டவுன் தான். முழு ஒரு அடங்கு சமயத்தில் உலகம் முழுவதும், மிகப்பெரிய பாதிப்புகளை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தி விட்டது. பல லட்சக்கணக்கான உயிர்களையும் கொரோனா வைரஸ் தொற்று காவு வாங்கி இருக்கிறது. அதுவும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இரண்டு முறை அதிவேகமாக பரவி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
2019 ஆம் ஆண்டு இந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், கொரோனா வைரஸ் தொற்று விட்டுச் சென்ற பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் உலக நாடுகள் தவிர்த்து வருகின்றன. மெல்ல மெல்ல பொருளாதார ரீதியில் ஒவ்வொரு நாடு மீண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று என்பது பலரின் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் எதிர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் இருப்பது பொதுமக்களிடையே ஆறுதலை அளித்து வருகிறது.
மீண்டும் தலை தூக்கும் கொரோனா வைரஸ் தொற்று
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, தற்போது கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.
செங்கல்பட்டு நடந்த உயிரிழப்பு
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரைச் சேர்ந்த மோகன் (60) என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மோகன் உயிரிழந்தார். மோகனுக்கு ஏற்கனவே கிட்னி பிரச்சினை இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றும் அதிகரிக்கத் தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறை சொல்வதென்ன ?
இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று பிரச்சனை கூறியதில்லை என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இருந்தும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான, கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















