மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடி : குறைந்துவரும் கொரோனா தொற்று : பூஜ்ஜியமானது உயிரிழப்பு.. நிம்மதியில் மக்கள்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று மட்டும் 141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை முடிந்து 275 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,304-ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று உயிரிழப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 2,085 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் இன்று மட்டும் 141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை முடிந்து 275 பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாவட்டத்தில் தினமும் 4 முதல் 6 பேர் உயிரிழந்து வந்த நிலையில் நேற்று 5 பேர் உயிரிழந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டமானது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 363 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 50 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கைகள் போதுமான அளவில் உள்ளது. மூன்றாவது அலையில் குழந்தைகள் நோய் தொற்றால் பாதிக்கப்படலாம் என்பதால் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தெரிவித்து உள்ள மாவட்ட நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து திருவாரூர்,திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு 47 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion