மேலும் அறிய
Advertisement
மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்ற 35 பேருக்கு கொரோனா - கோயில் பணியாளர்களை சோதிக்க முடிவு
கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கோயில் நிர்வாகம் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. தனியார் அமைப்பு ஒன்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் ஆதிபராசக்தி கோயிலுக்கு டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் மாலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்ற கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணம் பகுதியை சேர்ந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேருந்துகளில் தமிழகம் வந்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்களில் இதுவரை 35 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 3 பேருந்துகளில் கோயிலுக்கு வந்து சென்ற 100க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும், 2 தடுப்பூசியும் போட்டு இருக்க வேண்டும் முக கவசம் அணியவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தமிழகம் முழுவதும் இருக்கும் கோயில்களுக்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதே கட்டுப்பாடுகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தொற்று பரவியதை மற்ற பக்தர்களுக்கும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இருந்து சிறப்பு முகாம் அமைத்து பக்தர்களுக்கு பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டு இருக்க வேண்டும், முகாகவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பணியாளர்களுக்கு பரிசோதனை: கோயிலுக்கு வந்த சென்றவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கோயில் பணியாளர்கள், கடை வைத்திருப்பவர்கள், தங்கும் விடுதி வைத்திருப்பவர்கள் , உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion