மேலும் அறிய

சேகர்பாபுவுக்கு ஒன்று சொல்கிறேன்.. அருட்பணி ஜார்ஜ் பொன்னையா சர்ச்சை பேச்சு.

”சேகர்பாபுவுக்கு ஒன்னு சொல்கிறேன் நீ எத்தன கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், மனோ தங்கராஜுக்கு எத்தன கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டாலும் ஒருத்தன் கூட உங்களுக்கு ஒட்டு போடமாட்டான்”..


சேகர்பாபுவுக்கு ஒன்று சொல்கிறேன்.. அருட்பணி ஜார்ஜ் பொன்னையா சர்ச்சை பேச்சு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாக கூறி அருமனை கிறிஸ்துவ இயக்கம், அனைத்து கிறிஸ்துவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்துவ இஸ்லாமிய அமைப்புகள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் பனங்கரையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அருள்தந்தை ஜார்ஜ் பொன்னையா , சர்ர்சைக்குரிய வகையில் பேசினார், அவர் பேசும்போது, ”சேகர்பாபுவுக்கு ஒன்னு சொல்கிறேன். நீ எத்தன கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், மனோ தங்கராஜுக்கு எத்தன கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டாலும் ஒருத்தன் கூட உங்களுக்கு ஒட்டு போடமாட்டான் சரியா, உங்களுக்கு மண்டைகாடு பக்தர்களும் ஓட்டுப்போட போவதில்லை, இந்துக்களும் ஒட்டு போடப்போவதில்லை, நீங்க ஜெயித்தீகன்னா கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்துடாதீங்க, உங்க திறமையை வைத்து ஒட்டு வாங்கல, எல்லா எம்.எல்.ஏக்களிடமும் சொன்னோம், பிரின்சிடமும் சொன்னேன், உங்களுக்கு போட சொன்னது, எங்களுடைய ஆயர்கள் கண் அசைப்பாங்க, கிறிஸ்துவ ஊழியர்களும் பெந்தேகோஸ்தே ஊழியர்களும் வீடுவீடாய் போய் சொல்வாங்க, நாகர்கோவில் சுரேஷ்ராஜனிடம் கூட சொன்னோம் , நாங்க கிறிஸ்துவ வீடுகளிடம் ஓட்டுகேட்டோம்” என்றார்.
 
"நீ அங்கு ஜெபம் செய்யக்கூடாது, பங்குதந்தை இல்லத்தில் ஜீசஸ் படம் வைத்து உள்ளாயா அதை மூடு" என்ன காவல்துறை என்ன அதிகாரி சொன்னார். இதற்கு முன் ஒரு ஆர்.டி.ஒ பெண் இருந்தார். அவர் பக்கா ஆர்.எஸ்.எஸ், என்னைக்கூட மீட்டிங் கூப்பிட்டாங்க என் உடல்நிலை சரியில்லை என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் இங்கிலீசில் பதில் சொன்னேன், நான் இங்கிலாந்திலும் கனடாவிலும் படித்தவன், என் பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்க்காரன் நிற்கிறான் இவ எங்கபடித்தான்னு எனக்கு தெரியாது, என்னிடம் அஹு உஹும்னு பேசினா, நீங்க அதிகம் படித்தவர்ன்னு சொன்னாங்க. ஆம் நாம் உன்னை விட அதிகமாக படித்தவன் என்றேன் பழைய ஜிப்பாதான் போட்டுருப்பேன், 1989 ல் ஐ.நாவின் முன்பு படமெடுத்து கொண்டவன், 2014-ஆம் ஆண்டில் தான் உங்க மோடிக்கு அமெரிக்காகாரன் விசா கொடுத்தான், பாதர் என்பவன் படித்தவன், பாதிரியார்கள் பூசாரிகளோ மணியடிக்கிறவனோ கிடையாது படித்து பட்டம் பெற்றவர்கள், ஸ்டேன் சுவாமியை கைகால்களை கட்டி வைத்தார்கள், மோடியின் கடைசிகாலம் மிகமிக பரிதாபமாக இருக்கும்” சர்ச்சையாக பேசியுள்ளார்.

சேகர்பாபுவுக்கு ஒன்று சொல்கிறேன்.. அருட்பணி ஜார்ஜ் பொன்னையா சர்ச்சை பேச்சு.
"ஆர்.எஸ்.எஸ்காரனாலும் பாஜககாரனலும் தடுக்க இயலாது, மோடியின் கடைசி காலம் பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்து கொள்ளுங்கள், நாம் வணங்கிற கடவுள்  இருக்கிறார்கள் என்றால் அது நடக்கும்" என்றார். ஏற்கனவே ஹைப்பர்டென்சன் மாவட்டமான குமரியில் கிறித்துவ அருள் தந்தை பேச்சால் கோபம் தகிக்கிறது. சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடும் ஆர்.எஸ்.எஸ், பாஜக முதல் பொதுவான இந்துகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget