மேலும் அறிய

கருத்து கந்தசாமிபோல பேசி வருகிறார் அண்ணாமலை.. இதற்கு ஏன் பேசவில்லை - கே.எஸ் அழகிரி

மற்ற விஷயங்களுக்கு மட்டும் அண்ணாமலை கருத்து கந்தசாமிபோல பேசி வருகிறார் ஏன் இந்த மாணவி மரணத்திற்கு கருத்து கந்தசாமி அண்ணாமலை இதுவரை பேசவில்லை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் தங்கபாலு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே எஸ் அழகிரி, ”காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் துவங்க இருக்கிறார். 7-ம் தேதி கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும். இளம் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவும் ஒற்றுமையாக இருக்கின்ற மக்களை பிரிக்கிற ஆர்.எஸ் தத்துவத்திற்கு எதிராகவும் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காகவும்.பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 15 லட்ச ரூபாய் தருவதாக கூறினார். அந்தப் பணம் எங்கே இருக்கிறது விவசாயிகளின் சம்பளத்தை இரட்டிப்பு ஆக்குகிறேன் என்று சொன்னார் ஏன் அவ்வாறு செய்யவில்லை.


கருத்து கந்தசாமிபோல பேசி வருகிறார் அண்ணாமலை.. இதற்கு ஏன் பேசவில்லை - கே.எஸ் அழகிரி

மேலும் பல்வேறு மக்கள் நல பணிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மாபெரும் நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க இருப்பதாக கூறியவர்.திருவண்ணாமலை பகுதியில் இருந்து ஏராளமான தொண்டர்களை திரட்ட வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடன் இருப்பதாக கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமூர் பள்ளி மாணவி மரணம் சம்பந்தமாக நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நான் அந்த தீர்ப்புக்குள் செல்லவில்லை ஏனென்றால் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதா அல்லது விமர்சிக்கக் கூடாதா என்ற சட்ட சிக்கல் இருப்பதாகவும் தனக்கு உள்ள சந்தேகத்தை சொல்லுவதாகவும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த சிறு குழந்தையின் மரணத்திற்காக துயரம் தெரிவித்து. பள்ளி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதை கண்டனம் செய்து பல்வேறு அறிக்கைகள் வந்த பிறகும் கூட எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லுகின்ற பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அந்த மாணவியின் மரணத்தில் மட்டும் கருத்து கூறாமல் இருக்கிறார்” என்று தெரிவித்தார்

கருத்து கந்தசாமிபோல பேசி வருகிறார் அண்ணாமலை.. இதற்கு ஏன் பேசவில்லை - கே.எஸ் அழகிரி

”கருத்தே சொல்லாதவராக இருந்தால் பிரச்சனை இல்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து கந்தசாமி மாதிரி எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லக்கூடியவர் ஏன் கன்னியாமுத்தூர் பள்ளி குழந்தை மரணத்திற்கு மட்டும் கருத்து சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியவர் அல்லது கண்டனம் தெரிவிக்கவில்லை மேலும் அவர்கள் முறையான நீதி விசாரணை வேண்டுமென்றும் கேட்கவில்லை எதற்காக நீதிமன்றம் அவர்கள் செல்லவில்லை என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியவர். ஏற்கனவே ஒரு சம்பவத்தில் கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தில் படித்த குழந்தை மரணத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள் என்று கூறியவர். அந்தக் குழந்தை விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டியவர்கள் கள்ளக்குறிச்சி விஷயத்தில் மட்டும் ஆர்வம் காட்டாததின் மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியவர். எதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எதற்காக ஆர்.எஸ்.எஸ் மவுனமாக இருக்கிறார்கள் என்பதனை அறிவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விரும்புவதாக” தெரிவித்தார்.


கருத்து கந்தசாமிபோல பேசி வருகிறார் அண்ணாமலை.. இதற்கு ஏன் பேசவில்லை - கே.எஸ் அழகிரி

 

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி விவகாரத்தில் தமிழக அரசு ஒரு நீதி விசாரணை வைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பி விட்டதாகவும் இனி தமிழக அரசுக்கு அதில் பொறுப்பு இல்லை என்று கூறியவர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. அந்த குழந்தையின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் மற்ற கட்சியினர் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்த போது பாஜகவோ பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கொடுக்கவில்லை. ஆர்எஸ்எஸ் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பொருளாதார நிறுவனங்கள் கொடுத்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஜிடிபி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக கடுமையாக குறைந்திருக்கிறது இந்திய நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்பதாக சொன்னார்

கருத்து கந்தசாமிபோல பேசி வருகிறார் அண்ணாமலை.. இதற்கு ஏன் பேசவில்லை - கே.எஸ் அழகிரி

எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் ரைடு நடப்பதாகவும் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் ஏன் ரைட் நடப்பதில்லை என்று கேள்வி எழுப்பியவர்.மத்திய அரசு விசாரணை அமைப்புகளை ஏவல் நாய்களைப் போல ஏவி விடுவதாக குற்றம் சாட்டியவர் எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் சோதனைகள் நடத்தி ஆட்சியை கைப்பற்ற நினைப்பதாகவும். தொடர்ந்து பேசுகையில் எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களாக இருந்தால் சர்வாதிகார முறையில் வீழ்த்தப்படுவதாக கூறியவர், இந்திய மக்கள் இவை அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பதாகவும் அதனை விளக்குவதற்காகதான் ராகுல் காந்தியின் நடைபயணம் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.


கருத்து கந்தசாமிபோல பேசி வருகிறார் அண்ணாமலை.. இதற்கு ஏன் பேசவில்லை - கே.எஸ் அழகிரி

மேலும் பேசுகையில், இந்த சோதனைகள் அரசியல் காரணங்களுக்காக செய்யப்படுகிறது என்று கூறியவர் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும் செய்யப்படுகிறது சோதனைகள் இதேபோல் பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் நடந்தால் மக்கள் நம்புவார்கள் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் அங்கு ராம ராஜ்ஜியம் இங்கு என்ன ராவண ராஜ்யமா என்று கேள்வி எழுப்பினார். புதிய கல்விக் கொள்கை நம்முடைய மாநிலத்திற்கு உகந்ததல்ல என்று தெரிவித்தவர்.கடந்த ஒரு சில தினங்களாக எட்டு வழி சாலை சம்பந்தமாக தமிழகத்தில் பூதாகரமாக பேசப்பட்டு வரும் நிலையில் எதுவும் தெரியாததுபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி எட்டு வழி சாலை சம்பந்தமாக மீண்டும் எதுவாவது செய்யப் போகிறார்களா என்று செய்தியாளர்களை மீண்டும் கேள்வி எழுப்பியவர், அறிக்கை ஏதாவது வந்திருக்கிறதா எப்போது வந்தது என்று கேள்வி எழுப்பியவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் அப்போது அதை நாங்கள் எதிர்ப்போம் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Embed widget