அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது அதிமுக எம்.பி சிவி சண்முகம் காவல் நிலையத்தில் புகார்: காரணம் என்ன?
விழுப்புரம் : தன் மீது அவதூறு பரப்பும் வகையில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விழுப்புரம் : தன் மீது அவதூறு பரப்பும் வகையில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடந்த 9ம் தேதி யூடியூப் சேனலில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி குறிப்பிட்ட ஒரு சாதியை குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் பேசியதாக, அவருக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரோஷனை காவல் நிலையத்திற்கு வந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தான் எந்த ஒரு ஜாதி குறித்தும் அவதூறாக பேசவில்லை. தன் மீது கலங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக வீடியோ பதிவிட்ட அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இதுபோல் இவர் பல இடங்களில் இதே போன்று பேசி வருகிறார். ஆகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரோஷனை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகார் மனுவை உதவி காவல் ஆய்வாளர் பெற்றுகொண்டார்.
தொடர்ந்து சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்...
சமீப காலமாக அரசியல் விமர்சகர் ரவீந்தரன் துரைசாமி தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப்சேனல்களிள் தன்னுடைய அரசியல் கருத்துகளை கூறிவருகிறார். குறிப்பாக ரவீந்திரன் துரைசாமி சாதி பெயரை குறிப்பிட்டு பேசிவருகிறார். இந்த நிலையில் அதிமுக குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கட்சியில் உள்ளவர்களையும் சாதி குறிப்பிட்டு கூறிவருகிறார், மேலும் தனியார் யூடியூப் சேனலில் தன்னை பற்றி தரம்தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருவதாகவும், நான் சாதி குறிப்பிட்டு பேசியதாக கூறி சாதி மோதலை உருவாக்க முயற்சிக்கிறார். அவர் திட்டமிட்டு சாதி மோதலை உருவாக்க வேண்டும் என ரவீந்திரன் துரைசாமி பேசி வருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும், பொதுவாழ்க்கையில் இருப்பவர் என்ற வகையிலும் சாதி, மதம் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துரைக்கும் போது நான் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுள்ளேன். ரவீந்திரன் துரைசுவாமி அவர்கள் என்னிடம் கூறியுள்ள கருத்து முற்றிலும் தவறானது என்பதைத் தவிர முற்றிலும் இழிவானது. அவர் வேண்டுமென்றே, நேர்மையற்ற வகையில் இதுபோன்ற அறிக்கைகளை பேசி வருகிறார். மேலே சொன்னது பொய், எனவே, ரவீந்திரம் துரைசாமி, கௌதமன், தனியார் யூடியூப் சேனல் மற்றும் பிறருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற மக்களுக்கு இடையே பகையை வளர்க்கும், வதந்திகளை பரப்பும் பிற சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நடவடிக்கை எடுக்க கோரி ரோஷனை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறினார்.