Cylinder Price: முதல் நாளே அதிர்ச்சி... டக்கென உயர்ந்த வணிக சிலிண்டர் விலை! எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வணிக பயன்பட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,942 லிருந்து ரூ. 1,967 ஆக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தை மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் இன்றூ முதல் வணிக சிலிண்டர் விலை ரூ. 26.50 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
LPG சிலிண்டர் முக்கியமாக உள்நாட்டு மற்றும் உள்நாட்டு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்கள் முறையே 5 கிலோ, 14.2 கிலோ மற்றும் 19 கிலோவில் கிடைக்கின்றன. இந்திய குடும்பங்கள் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம். 13வது சிலிண்டரில் இருந்து மானியம் அல்லாத விலையில் வசூலிக்கப்படும். திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) என்பது பியூட்டேன் மற்றும் புரொப்பேன் ஆகியவற்றின் கலவையாகும். இது உடனடியாக திரவமாக்கப்பட்டு, சமையல் மற்றும் வெப்பமூட்டும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாயுவின் பாதுகாப்பான வடிவமாகும். எல்பிஜி நீராவி காற்றை விட கனமானது மற்றும் அது தாழ்வான இடங்களில் குடியேறுகிறது. எல்பிஜி ஒரு மெல்லிய வாசனையைக் கொண்டிருப்பதால், கசிவு ஏற்பட்டால் வாயு வாசனையை எளிதாகக் கண்டறிய மெர்காப்டன் எனப்படும் நாற்றம் அதில் சேர்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் முன்னதாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் ஒன்றாக, நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதேசமயம் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ.200 குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது மேலும், 200 ரூபாய் குறையும் எனவும் அனுராக் தாக்கூர் கூறினார்.