மேலும் அறிய

Cold Wave Alert: வானிலை எச்சரிக்கை! தென்கடலோர மாவட்டங்களில் மழை, உறைபனி வாய்ப்பு: மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்காணல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

வரும் 29, 30 ஆகிய தேதிகளில் தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

25-12-2025: வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்ட்ங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

26-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

27-12-2025 மற்றும் 28-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

29-12-2025: தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

30-12-2025: தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

31-12-2025: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்:

25-12-2025 முதல் 29-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தப்பட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

25-12-2025 முதல் 29-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை:

25-12-2025 மற்றும் 26-12-2025: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்காணல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (25-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் வேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வேசாள மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (26-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

25.12.2835 முதல் 29-12-2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செய்ய வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
iPhone 17e Leaked Specs.,: இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்.! சிறுபான்மையினர் மீது தாக்குதல்- விளாசும் ஸ்டாலின்
மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்.! சிறுபான்மையினர் மீது தாக்குதல்- விளாசும் ஸ்டாலின்
Embed widget