மேலும் அறிய

வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் - வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

காங்கேயத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: “ நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மார்ச் 22-ஆம் தேதியில் இருந்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். தொண்டர்களை பார்க்கும் போது களைப்பு நீங்கி உற்சாக மனநிலையோடு இருக்கிறேன்.வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள் தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. 

வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது வாக்குச்சாவடி முகவர்களின் முதல் கடமை. திமுக அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்க எடுத்துரைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு என்ன தேவையோ அதை தெரிந்து கொண்டு நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையானவற்றை செய்து தர கட்சி நிர்வாகிகளை அணுகி நிறைவேற்றித் தர வேண்டும். 

மக்களின் நியாமான கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக சத்தியமாக நிறைவேற்றித் தரப்படும். மக்களாட்சி நடத்தி வரும் நம்மை நிராகரிப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். திமுக அளித்த மிகப்பெரிய வாக்குறுதியான கலைஞர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். 

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. வரவும் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என்று மோடி கூறினாரே மீட்டாரா?  மகளிர் உரிமைத் தொகையை வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லை எனக்கூறி கொள்ளையடிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்றார் மோடி, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்தாரா? படிக்கும் பட்டதாரிகளாக இருக்கும் நம் இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார் மோடி. 

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதரத்தை படுகுழியில் தள்ளிவிட்டது மோடி அரசு. மத்திய அரசின் தவறான பொருளாதர கொள்கையால், தொழில் நகரங்களான கோவை, திருபூர், நொடிந்து போய் உள்ளன. மத்திய அரசின் தவறான பொருளாதர கொள்கையால் டாலர் சிட்டியான திருப்பூர் தற்போது டல் சிட்டி ஆகி விட்டது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கு உதவ இதுவரை மத்திய அரசு முன்வரவில்லை. சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்றது மத்திய அரசு, அதை செய்தார்களா? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இவ்வாறு முதலமைச்சர் பேசினார். 

மேலும் படிக்க

Rahul Gandhi: "மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி உறுதி.. ஆனால், ராஜஸ்தானில்" மனம் திறந்த ராகுல் காந்தி

Jaishankar: "மாற்றத்தை எதிர்க்கும் செல்வாக்கு மிக்க நாடுகள்" யாரை சொல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget