மேலும் அறிய

CM Stalin's letter: ”37 மீனவர்கள் கைது; முற்றுப்புள்ளி வைத்திடுக” - மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-10-MM-985. IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717, IND-TN-10-MM-917 மற்றும் IND- கைது TN-10-MM-972 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28-10-2023 அன்று இலங்கை கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும், குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இவ்வாறான தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே மன அழுத்தத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது கோரிக்கைள் ஏற்கப்படாமல் போவதாக உணர்கிறார்கள் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், நம் மீனவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிய அரசு மேலும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும். இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்வதாக வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிலையான தூதரக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget