மேலும் அறிய

'என்னை தேசியக் கொடியேற்ற வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!’ - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாகக் கொடியேற்றிப் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் சரியாக 7:30 மணிக்கு கொடியேற்றிவைத்தார் பிரதமர் மோடி.தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் 9:00 மணிக்குக் கொடியேற்றினார். கொடியேற்றிய பிறகு பேசிய முதலமைச்சர். இது 75-வது சுதந்திர தினம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வருடம் எனக் குறிப்பிட்டார். மகாத்மாவை கதர் அணிந்த காந்தியாக வழியனுப்பி வைத்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு எனக் குறிப்பிட்டார். மேலும் சுதந்திரத் தியாகிகளுக்கான ஓய்வூதிய உயர்வு அவர்களது குடும்பத்துக்கான உதவித்தொகை உயர்வு குறித்தும் விழாவில் அறிவித்தார்.    

‘400 ஆண்டுகள் பழமை கொண்ட இந்த கோட்டையில் இந்திய நாட்டின் இந்தக் கொடியை ஏற்ற ரத்தம் சிந்திய வீரர்களை வணங்குகிறேன். விண்ணூற்ற கொடியினை ஏற்றும் வாய்ப்பு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. அனைவருக்கும் வணக்கம். கோட்டைக்கொத்தளத்தில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சுதந்திர நாளில் யார் முதலமைச்சர் யாரோ அவர்தான் கொடியேற்ற வேண்டும் என்கிற வாய்ப்பை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிமை பெற்றுத்தந்த மாபெரும் சுதந்திர சிந்தனையாளர். ஏராளமான பெருமைகள் இந்த ஆண்டுக்கு உண்டு. தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா. நீதிக்கட்சியின் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான். மகாத்மா காந்தி கதர் ஆடை உடுத்தத்தொடங்கிய நூற்றாண்டு. வ.உ.சிக்கு 150வது பிறந்தநாளும் இந்த ஆண்டுதான். மகாகவி பாரதி மறைவின் நூறாண்டு. எத்தனையோ வரலாற்று நிகழ்வின் 100 ஆண்டு இந்த 2021. திமுக அரசின் 6வது முறை ஆட்சி. விடுதலைக்காகப் போராடிய மண் நமது தமிழ் மண். பூலித்தேவர்,வேலுநாச்சி, தீரன் சின்னமலை,மருது சகோதரர்கள், தில்லையாடி வள்ளியம்மை, தந்தைப்பெரியார், திருவி.க., சிங்காரவேலர், திருப்பூர் குமரன், ராஜாஜி, காமராஜர், ஜீவா, கேப்டன் லட்சுமி, மா.போ.சி,, கே.பி.சுந்தராம்பாள். இத்தகைய தமிழ்தியாகிகளின் ரத்தம் கொண்டு கட்டப்பட்டது இந்திய சுதந்திரத்தூண். நான் சொன்னவர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் தியாகிகள். அவர்கள் குடும்பத்துக்கு உதவித்தொகை ரூ.17000 லிருந்து ரூ.18000ஆக உயர்த்தப்படும் குடும்ப ஓய்வுதியத்தொகை ரூ,8500லிருந்து ரூ.9000 ஆக உயர்த்தப்படும். சீனாவால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது இந்திய நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என நிதி திரட்டிக் கொடுத்தவர் அண்ணா. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் கண்டனத் தீர்மானம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன்னுக்கு கோட்டை, ராஜாஜி நினைவாலையம், வள்ளியம்மை நினைவு இல்லம், வ.உ.சி செக்கு நினைவுச்சின்னமானது, சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூன் என நாட்டுக்காக உழைத்தவர்களைப் போற்றுகிறோம். வ.உ.சி பிறந்தநாள் எழுச்சியுடன் கொண்டாட்டம். அரசியல் விடுதலை மட்டும் போதாது பொருளாதார விடுதலையும் வேண்டும் என வ.உ.சி. விரும்பினார். எல்லாருக்கும் எல்லாம் என உறுதி கொண்டது  அரசு. கொரோனா மருத்துவ, மனநல நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என பல சிக்கல்களில் கொண்டு நிறுட்த்ஹிவிட்டது கொரோனா. மருத்துவப் பணியாளர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அரசின் 101வது நாள். வெள்ளை அறிக்கை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம், இதில் கொரோனாவை மேலாண்மை செய்து காப்பாற்ற வேண்டியதிலும் வெற்றி கண்டிருக்கிறது. 14வது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆவின் விலை குறைப்பு. மகளிர் இலவசப் பேருந்துப் பயணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், தகைசால் தமிழர் விருது தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 3கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் புதிய பன்னோக்கு மருத்துவமனை கிண்டி கிங் வளகாத்தில் அமைய உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகம் அறிவியல் பொருளாதாரத்தில் தமிழ்நாடு ஒருசேர வளரவேண்டும். அரசு, தனிமனித பொருளாதாரம் தன்னிறைவு மிக்கதாக வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமூகமாக மாற வேண்டும். இதைத்தான் நம் தியாகிகள் விரும்பினார்கள் அதற்குதான் போராடினார்கள். அத்தகைய தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டுக்கும் மகாத்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு உடனிருந்து உதவியவர்கள் தமிழர்கள். ஐரோப்பாவுக்கு எப்படி இத்தாலிய மொழியோ அப்படி இந்தியாவுக்குத் தமிழ். மதுரை வந்த மகாத்மாவை மேலாடை துறந்த கதராடை மகாத்மாவாக தமிழ்நாடு  வழியனுப்பி வைக்கப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சியகம் 6 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள். வாழ்க தமிழ்நாடு! வாழ்க இந்தியா’ எனப் பேசி முடித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Viduthalai 2: ரெடியா? நாளை விடுதலை 2 ரிலீஸ்! 2024ஐ வெற்றியுடன் முடித்து தருவாரா வெற்றி மாறன்?
Embed widget