(Source: ECI/ABP News/ABP Majha)
இலங்கை அகதிகள் முகாம்.. மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல. இலங்கை தமிழர்களுக்கு நாம் இருப்போம். இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலாவதாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித்தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மூன்று சட்டங்களையும் அரசு ரத்து செய்யவேண்டும் என தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தான் வரிசையில் 7வது மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மத்திய அரசின் மூன்று சட்டங்களும் கூட்டாச்சித் தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும், முதலமைச்சர் கூறுகையில், மண்னையும், விவசாயிகளையும் காக்கு வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை என்றும், வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரியவில்லை கிடைக்கும் வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளதாகவும் கூறினார். மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் உள்ளதாகவும், சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்று எழுச்சி மிகு போராட்டம் நடந்தது இல்லை எனவும் கூறினார். மேலும், ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை பாராட்டி எம்எல்ஏ பூண்டி கலைவாணர் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “இலங்கை அகதிகள் என்று நேற்று நான் தவறுதலாகக் கூறிவிட்டேன். இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என கூற வேண்டாம். இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல. இலங்கை தமிழர்களுக்கு நாம் இருப்போம். இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது” என்று கூறினார்.
#BREAKING | இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்யப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்https://t.co/wupaoCQKa2 | #TNAssembly | #MKStalin | #SriLankanTamil | #DMK | @mkstalin pic.twitter.com/VCCeauCkCS
— ABP Nadu (@abpnadu) August 28, 2021
இதனைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் தரமற்ற கறவை மாடுகள், ஆடுகள் வழங்கி பல முறைகேடுகளை செய்துள்ளதாக கால்நடை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். இந்த திட்டத்துக்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா சென்று கறவை மாடுகளை வாங்கியுள்ளதாகவும் பயனாளிகளை அழைத்துச்சென்று மாடுகளை வாங்காமல் முறைகேடு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
Farm Law Protest: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு